கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி 'கோவிஷீல்டை' தடை செய்ய வழக்கு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
சென்னை:கொரோனா தடுப்பு மருந்தான 'கோவிஷீல்ட்' பயன்படுத்த தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த ஆசிப் ரியாஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:ஆக்ஸ்போர்டு பல்கலை லண்டனில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள

சென்னை:கொரோனா தடுப்பு மருந்தான 'கோவிஷீல்ட்' பயன்படுத்த தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த ஆசிப் ரியாஷ் என்பவர் தாக்கல் செய்த மனு:ஆக்ஸ்போர்டு பல்கலை லண்டனில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் நிறுவனம் 'கோவிஷீல்ட்' என்ற கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தயாரிக்கிறது.

புதிதாக மருந்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் போது விதிகளின்படி பரிசோதிக்கப்பட வேண்டும். தன்னார்வலராக முன்வந்ததால் 2020 அக்டோபரில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் எனக்கு தடுப்பூசி போடப்பட்டது. 10 நாட்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதன்பின் கடுமையான தலைவலி ஏற்பட்டது; வாந்தி வந்தது. என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை. அருகில் உள்ள மருத்துவரை அழைத்து வந்து என்னை பரிசோதித்தனர். பின் அவசர வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டேன்.
மூன்று மாதங்களாகியும் பழைய நிலைக்கு திரும்பவில்லை.கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.நிபுணர் குழுவை அமைத்து அறிக்கை அளிக்க உத்தரவிட வேண்டும். எனக்கு ஏற்பட்ட கஷ்டத்துக்காக 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சீரம் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு நீதிபதி அப்துல் குத்துாஸ் முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசு மருந்து கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 26க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X