பொது செய்தி

தமிழ்நாடு

இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
மதுரை:திருநெல்வேலி-கங்கைகொண்டான், கோவில்பட்டி-கடம்பூர் ரயில் பாதை பிரிவுகளில் இரட்டை பாதை இணைப்பு பணிகள் நடப்பதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.திருச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் (02627/02628) பிப்., 19 முதல் 28 வரை இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.சென்னையில் புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில்(02631) பிப்., 23 முதல் 27 வரை மதுரை -

மதுரை:திருநெல்வேலி-கங்கைகொண்டான், கோவில்பட்டி-கடம்பூர் ரயில் பாதை பிரிவுகளில் இரட்டை பாதை இணைப்பு பணிகள் நடப்பதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் (02627/02628) பிப்., 19 முதல் 28 வரை இரு மார்க்கங்களிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.சென்னையில் புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில்(02631) பிப்., 23 முதல் 27 வரை மதுரை - திருநெல்வேலி இடையேயும், பிப்., 24 முதல் 28 வரை திருநெல்வேலியில் புறப்படும் சென்னை சிறப்பு ரயில்(02632) திருநெல்வேலி - மதுரை இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மதுரையிலிருந்து இயங்கும்.

நாகர்கோவில் - கோவை இடையே இயங்கும் ரயில்கள் (06321/06322) பிப்., 24முதல் 28 வரை நாகர்கோவில் - மதுரை இடையே ரத்து செய்யப்படுகின்றன.பிப்., 23 முதல் 27 வரை பெங்களூருலிருந்து புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில்(07235) விருதுநகர் -நாகர்கோவில் இடையேயும், பிப்., 24 முதல் 28 வரை நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு புறப்படும் சிறப்பு ரயில்(07236) நாகர்கோவில்- விருதுநகர் இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன.

பிப்., 26, 27, 28ல் நாகர்கோவிலில் இருந்து கோவை புறப்படும்சிறப்பு ரயில் (02667) நாகர்கோவில் - மதுரை இடையேயும், பிப்., 25, 26, 27 ல் கோவையில் புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (02668) மதுரை - நாகர்கோவில் இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன.பிப்., 27 மைசூரில் புறப்படும் துாத்துக்குடி சிறப்பு ரயில் (06236), பிப்., 28 ல் துாத்துக்குடியிலிருந்து புறப்படும் மைசூரு சிறப்பு யில் (06235) மதுரை - துாத்துக்குடி இடையே ரத்து செய்யப்படுகின்றன.

பிப்., 25 மும்பை தாதரில் புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில்(06071) விருதுநகர் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படும்.பிப்., 24, 25, 26, 28 ல் புறப்படும் சென்னை எழும்பூர் -குருவாயூர் சிறப்பு ரயில்(06127) அதன் வழக்கமான பாதையான விருதுநகர், வாஞ்சிமணியாச்சி, திருநெல்வேலிக்கு பதிலாக விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி பாதையில் இயக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X