பொது செய்தி

தமிழ்நாடு

16 ல் ஒன்றை கூட நிறைவேற்றாத அரசு அதிருப்தியில் ரேஷன் பணியாளர்கள்

Added : பிப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:சம்பள உயர்வு, குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளில் ஒன்றைக்கூட தமிழக அரசு நிறைவேற்ற மறுப்பதாக அதிருப்தியிலுள்ள தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய அளவில் போராட முடிவு செய்துள்ளனர்.சிவில் சப்ளை கார்ப்பரேஷன் ரேஷன்கடை ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை கூட்டுறவு ரேஷன்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடை

மதுரை:சம்பள உயர்வு, குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட 16 கோரிக்கைகளில் ஒன்றைக்கூட தமிழக அரசு நிறைவேற்ற மறுப்பதாக அதிருப்தியிலுள்ள தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் மாநிலம் தழுவிய அளவில் போராட முடிவு செய்துள்ளனர்.

சிவில் சப்ளை கார்ப்பரேஷன் ரேஷன்கடை ஊழியர்களுக்கு இணையான சம்பளத்தை கூட்டுறவு ரேஷன்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் அல்லது ஓய்வு பெறும் இறுதி மாத சம்பளத்தில் பாதி இதில் எது அதிகமோ அதை வழங்க வேண்டும். பல்வேறு துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பொது விநியோக திட்டத்தை ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

5000 பேரின் பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக ரேஷன்கடை பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர் சங்க மாநில பொது செயலாளர் ஜெயசந்திரராஜா கூறியதாவது: 16 கோரிக்கைகளை தொடர்ந்து அரசு கவனத்திற்கு கொண்டு சென்றும் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. பயோ மெட்ரிக் முறையை வரவேற்கிறோம். ஆனால் அதிலுள்ள நடைமுறை சிக்கல்களை அரசு களைய மறுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி அரசு கவனத்தை ஈர்க்க பிப்., 23 ல் மாநிலம் தழுவிய அளவில் ரேஷன்கடை பணியாளர்கள் கருப்புசட்டை அணிந்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-பிப்-202108:10:52 IST Report Abuse
Bhaskaran எடை குறைவாக போட்டு மக்களை ஏமாற்றாதீர்கள் அப்போதுதான் உங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X