'டூல்கிட்' வழக்கு :போலீசுக்கு தடை

Added : பிப் 20, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புதுடில்லி :'திஷா ரவி மீதான வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை, ஊடகங்களில் பகிரக்கூடாது' என, டில்லி போலீசாருக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க், 'டுவிட்டர்' வாயிலாக வெளியிட்ட, 'டூல்கிட்' எனப்படும், போராட்டம்
'டூல்கிட்' வழக்கு :போலீசுக்கு தடை

புதுடில்லி :'திஷா ரவி மீதான வழக்கு விசாரணையில் சேகரிக்கப்பட்ட தகவல்களை, ஊடகங்களில் பகிரக்கூடாது' என, டில்லி போலீசாருக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தம்பர்க், 'டுவிட்டர்' வாயிலாக வெளியிட்ட, 'டூல்கிட்' எனப்படும், போராட்டம் தொடர்பான தகவல் தொகுப்பு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.


latest tamil newsவன்முறையை துாண்டும் வகையிலான அந்த டூல்கிட்டை, காலிஸ்தான் அமைப்பினர் உதவியுடன் உருவாக்கியதாக, சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவி, 21, கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், திஷா ரவி முறையிட்டார். வழக்கு விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட தகவல்களை, ஊடகங்களிடம் போலீசார் வெளியிடுவதாக குற்றஞ்சாட்டினார். இந்த மனு, நீதிபதி பிரதிபா சிங் முன்னிலையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி உத்தரவிட்டதாவது: இந்த வழக்கு தொடர்பான எந்த தகவலையும், ஊடகங்களிடம் டில்லி போலீசார் பகிரக்கூடாது. அதேபோல், இதில் வெளியே கசியும் தகவல்களை, ஊடகங்கள் வெளியிடக்கூடாது. சில ஊடகங்கள், குறிப்பிட்ட சில செய்திகளை வெளியிடுகின்றன; அப்படி செய்வது,
விசாரணையை பாதிக்கும்.இவ்வாறு, அவர் உத்தரவிட்டார். இதற்கிடையே, திஷா ரவியின் காவலை, மேலும் மூன்று நாட்கள் நீட்டித்து, டில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chidam - 325,இந்தியா
20-பிப்-202118:59:19 IST Report Abuse
Chidam காவல் துறையை சுதந்திரதமாக செயல்பட அனுமதிக்காவிட்டால் , குற்றச்செயல்கள் கூடும் .அவரவர் வேலையை அவரவர் ஒழுங்காக செய்தால்தான் நாடு உருப்படும் .
Rate this:
Cancel
VARATHARAJ - chennai,இந்தியா
20-பிப்-202112:49:07 IST Report Abuse
VARATHARAJ For anti nationals encounter is the best way of punishment.
Rate this:
Cancel
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
20-பிப்-202111:13:43 IST Report Abuse
Velumani K. Sundaram காவல்துறை தனித்தன்மையோடு செயல்படவேண்டும். நீதித்துறை காவல்துறையை CONTROL பண்ணக்கூடாது. காவல்துறை சமூகவலைத்தளங்களில் செய்வது தவறாகஇருந்தால், குற்றவாளி தான் நிரபராதி என்று நிரூபித்துவிட்டு காவல்துறைமீது மானநஷ்ட வழக்குப்பதிவுசெய்ய வாய்ப்பு இருக்கிறது. I doubt the credibility of the concerned judge
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X