பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.சி., பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில், அரசு மற்றும் தனியார், 'ஏசி' பஸ்களை இயக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, 2020, மார்ச் 25ல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல், அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. கொரோனா பரவல் குறையத் துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.இதன்படி, செப்., 7 முதல், போக்குவரத்துக்கு பஸ்களை இயக்க, அரசு அனுமதி அளித்தது.

சென்னை: தமிழகத்தில், அரசு மற்றும் தனியார், 'ஏசி' பஸ்களை இயக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.



latest tamil news


தமிழகத்தில், கொரோனா தொற்று பரவலை தடுக்க, 2020, மார்ச் 25ல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல், அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. கொரோனா பரவல் குறையத் துவங்கியதும், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.இதன்படி, செப்., 7 முதல், போக்குவரத்துக்கு பஸ்களை இயக்க, அரசு அனுமதி அளித்தது. எனினும், 'ஏசி' பஸ்களை இயக்க அனுமதிக்கவில்லை.


latest tamil news


தமிழ்நாடு, அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான, 702, 'ஏசி' பஸ்கள் இயக்கப்படாததால், வருவாய் பாதிக்கப்பட்டது. இதேபோல, தனியார் பஸ் நிறுவனங்களும் பாதிப்புக்கு உள்ளாகின. எனவே, 'ஏசி' பஸ்களை இயக்க, அனுமதி அளிக்கும்படி, போக்குவரத்து கமிஷனர், அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை பரிசீலித்த அரசு, தனியார் மற்றும் அரசு 'ஏசி' பஸ்கள், தொழிற்சாலை, பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளுக்கு இயக்கப்படும், 'ஏசி' பஸ்களை இயக்க, அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

'ஏசி' பஸ்களை இயக்கும்போது, 'ஏசி' அளவு, 24 டிகிரி முதல், 30 டிகிரிக்குள் வைக்க வேண்டும்; வெளிக்காற்று வரவும், ஏற்பாடு செய்ய வேண்டும்.வெப்ப நிலை அளவு, 25 டிகிரி செல்ஷியசுக்கு மேல் இருக்க வேண்டும்என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kalai Arashan - Quito,ஈக்வடார்
20-பிப்-202108:38:24 IST Report Abuse
Kalai Arashan எங்களுக்கு எ சி பஸ் வாண்டாம்............ ஓ சி பஸ் தான்வேண்டும்
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
20-பிப்-202107:40:01 IST Report Abuse
Ramona பேர் தான் சொகுசு ஏசி பஸ், ஒரு வாரத்திற்குள் கண்ணாடி உடைக்கப்பட்டது இருக்கும், தூசி படிந்து, உட்கார கூட முடியாமல் முகத்தை சுருக்கிக் கொண்டு உட்கார வேண்டும், ஓட்டுனர் நடத்துனர், தனக்கு உயிர் பிழைக்க உதவும் இந்த ஊர்திகள் கண்டு கொள்வதே கிடையாது, டெப்போ மேனஜர்கள் தாங்கள் மேனஜர்கள் தான், அதனால் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள், கோடிகள் போட்டு அரச மக்களின் தேவைகளைநிறைவேற்றி வருகிறது, ஏனோ ஊழியர்கள் தங்களது மெத்த போக்கை கைவிட மாட்டோம் என இருக்கிறார்கள். பயணிகள் ஏன் தனியார் பஸ்கள் நன்றாக இருக்கும் என சொல்லமாட்டாரகள். அனைவரும் சற்று சிந்திப்போம்.
Rate this:
Cancel
raskoolu - Madurai,இந்தியா
20-பிப்-202104:12:33 IST Report Abuse
raskoolu வண்டி கண்டிஷன் எப்பிடி இருக்கோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X