பொது செய்தி

தமிழ்நாடு

பக்தி சாதனம் ஒன்று தான் மனித குலத்தை துாய்மைப்படுத்தும்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
மதுரை: ''பக்தி சாதனம் ஒன்று தான் மனித குலத்தை துாய்மைப்படுத்தும்'' என, மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடம் பரத்வாஜ் சுவாமிகள் பேசினார்.அவருக்கு பூர்ண கும்பமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு 308 தேங்காய் வைத்து வராஹி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினார்.அவர் பேசியதாவது: ஒவ்வொரு மனிதனுக்கும் அக, புற



மதுரை: ''பக்தி சாதனம் ஒன்று தான் மனித குலத்தை துாய்மைப்படுத்தும்'' என, மதுரை எஸ்.எஸ்.காலனி சத்சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடம் பரத்வாஜ் சுவாமிகள் பேசினார்.அவருக்கு பூர்ண கும்பமரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு 308 தேங்காய் வைத்து வராஹி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளை நடத்தினார்.அவர் பேசியதாவது: ஒவ்வொரு மனிதனுக்கும் அக, புற ஒழுக்கம் தேவை. அரக்க குணத்தை விட்டு விட்டு, இரக்க குணத்துடன் வாழ வேண்டும். வஞ்சகம், களவு, பொறாமை, நிதானமின்மை ஆகிய தீய பழக்கவழக்கங்களை கைவிட்டு அன்பு, பணிவு, இரக்கம் ஆகிய நல்ல பழக்கவழக்கங்களை கையாள வேண்டும். வேண்டாதவற்றை மண்டையில் போட்டு திணித்து வைத்துக் கொண்டு அவற்றை இறக்க முடியாமல் நம்மையே நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். அதைவிட அம்பாள் ஜபத்தை உருப்போட்டு உருப்பட வழிபார்க்க வேண்டும். ஜபங்கள் தான் மனிதனுக்கு ஒழுக்கத்தையும், நல்ல பண்பையும் தரும், என்றார்.சத் சங்கம் பொருளாளர் ராமச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர்கள் சிவராமன், சந்திரசேகரன், ராயல் குழும பள்ளிகள் தலைவர் ராஜாராம், அனுஷத்தின் அனுகிரஹம் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X