தடுப்பணைக்கு  தடை கோரி வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பணைக்கு  தடை கோரி வழக்கு

Added : பிப் 20, 2021
Share
மதுரை,- திருமங்கலம் மேல நேசநேரி செல்வபாண்டி, கள்ளிக்குடி மொச்சிகுளம் பன்னீர்செல்வம் உட்பட 9 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருமங்கலம் திரளியில் கவுண்டன் ஆற்றில் ரூ.2.4 கோடியில் அரசுத் தரப்பில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. இதற்கு முறையாக சர்வே செய்யவில்லை. ஆற்று நீரை நம்பியுள்ள கண்மாய், கிராமங்களில் எத்தகைய தாக்கம்,

மதுரை,- திருமங்கலம் மேல நேசநேரி செல்வபாண்டி, கள்ளிக்குடி மொச்சிகுளம் பன்னீர்செல்வம் உட்பட 9 பேர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: திருமங்கலம் திரளியில் கவுண்டன் ஆற்றில் ரூ.2.4 கோடியில் அரசுத் தரப்பில் தடுப்பணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது. இதற்கு முறையாக சர்வே செய்யவில்லை. ஆற்று நீரை நம்பியுள்ள கண்மாய், கிராமங்களில் எத்தகைய தாக்கம், பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்யவில்லை. தடுப்பணையால் கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து தடைபடும். அடிப்படைத் தேவைக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். பொதுப்பணித்துறை, மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினோம். தடுப்பணை கட்டுமானத்திற்கு தடை விதிக்க வேண்டும். ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர். நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு மதுரை கலெக்டர், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்பி மார்ச் 12க்கு ஒத்திவைத்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X