மதுரை - மதுரை கொடிமங்கலத்தில் யாதவா கல்லுாரி விலங்கியல் துறை, மதுரை பல்நோக்கு பல் மருத்துவமனை சார்பில் இலவச பல் மருத்துவ, விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் அழகுலட்சுமி, துணைத் தலைவர் ஆனந்தவள்ளி முகாமை துவக்கினர். பேராசிரியர் மதியழகன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சேகர் தலைமை வகித்தார். பல் சிதைவு, ஈறு பிரச்னை, உணவு பழக்கம் குறித்து டாக்டர்கள் தீனதயாளன், சித்ரா பேசினர். இலவசமாக மருந்து, மாத்திரைகள், பற்பசை, பிரஷ் வழங்கப்பட்டன. மாணவி வனிதா நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE