மதுரை: மதுரை வடிவேல்கரையில் மன்னர் திருமலை நாயக்கர் காலத்துகலுங்கு கல்வெட்டை(1572) மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வரலாற்று ஆய்வு மையஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.கல்லுாரிசெயலாளர் விஜயராகவன் கூறியதாவது: வரலாற்று மைய ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆத்மநாதன், மேலுார் அரசு கல்லுாரி வரலாற்று முனைவர் பட்ட ஆய்வாளர் உதயக்குமார், கல்லுாரி முன்னாள் மாணவர் அழகுமலைக்கண்ணன் தகவல்படி வடிவேல்கரையில் களப்பணி செய்தனர்.இதில் மன்னர் திருமலை நாயக்கர் கால கலுங்குகல்வெட்டை கண்டுபிடித்தனர். நாயக்கர் மதுரையை தலைநகராக கொண்டு கி.பி. 1623 - 59 வரை ஆட்சி செய்தார். வடிவேல்கரை கண்மாய் கலுங்கில் நடப்பட்ட கல்லில் கோட்டுருவமாக கீழ் நோக்கிய வேல், மேல் நோக்கிய பீடத்தில் கொடி, சூலம் உள்ளது.இக்கல்வெட்டை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் படித்தார். கல்வெட்டு சக ஆண்டு 1572ல் பொறிக்கப்பட்டது. இதற்கு இணையான பொது ஆண்டு 1650. விக்குறுதி என்ற தமிழ் ஆண்டு, அற்பசி மாதம் என உள்ளது. அந்த ஆண்டில் நாயக்கர் சிவன் என்பவர் கண்காணிப்பில் கண்ணப்பிள்ளை மணியமாக இருந்த போது திருப்பரங்குன்றம் கடவுள் குமாரசுவாமி தேவதான மானியம் குளம் வெட்டி அதிக நீர் வெளியேற கலுங்கு கட்டிய செய்தி கல்வெட்டில் உள்ளது.இக்கல்வெட்டில் வரும் வாத்தகரை என்பது பிற்காலத்தில் வடிவேல்கரை எனமருவியிருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் தெரிவித்தார், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE