மதுரை: மதுரையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம், கிளை சங்கங்கள் சார்பில் 'தமிழ் தாத்தா' உ.வே. சாமிநாதய்யர் பிறந்த நாள் விழா மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்தது. தல்லாகுளத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.எம்.எல்.ஏ., சரவணன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், சங்க செயலாளர் தினகரன், மகளிரணி தலைவர் பாமா, இளைஞரணி தலைவர் ராமமூர்த்தி, சிம்மக்கல் ஆன்மிக செயலாளர் கார்த்திக் பட்டர், எல்லீஸ் நகர் கிளை மகளிரணி செயலாளர் சாவித்திரி ஜெயஸ்ரீ பங்கேற்றனர்.தலைவர் பக்தவச்சலம் தலைமையில் மாநில துணை பொதுச்செயலாளர் இல.அமுதன் மாலையணிவித்தார். மாநில செயலாளர் வெங்கடேஷ், ஜெய்ஹிந்த்புரம் கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர் கிளை தலைவர் கணபதி வரதசுப்பிரமணியன், செயலாளர் பாபு, பொருளாளர் அம்பி, புதுார் கிளை பொருளாளர் லட்சுமிநரசிம்மன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மதுரை கல்லுாரியில் சொற்பொழிவு நடந்தது. பேராசிரியர் தனசாமி வரவேற்றார். முதல்வர் சுரேஷ், கல்லுாரி வாரிய துணை தலைவர் சங்கர சீத்தாராமன், அருளானந்தர் கல்லுாரி உதவி பேராசிரியர் பரமசிவன்பங்கேற்றனர். உதவி பேராசிரியர் கருணாகரன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE