மதுரை; தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் (ரூ.92.67) டீசல் (ரூ.86.08) விலை ரூ.100ஐ தொடும் நிலையில் சரக்கு லாரிவாடகை, அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர வாய்ப்புள்ளது.
கொரோனா காலத்தில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் (ரூ.50) டீசல் (ரூ.48.50) மீதான வாட் வரியை அதிகரித்தது. இதனால் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100ஐ நெருங்கி விட்டது.இதன் எதிரொலியாக காஸ் விலையும் உயர்ந்துள்ளது.* லாரி வாடகை உயரும்மதுரை லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சாத்தையா கூறியதாவது: மார்ச் 5 பெங்களூரில் நடக்கும் தென்னிந்திய மோட்டார் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் டீசல் விலையேற்றத்தை கண்டித்து மார்ச் 15 முதல் வேலை நிறுத்தம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். அசாம், அரியானா போன்ற மாநிலங்களில் 5 ஆண்டு வாட் வரி குறைத்து, பெட்ரோல், டீசல் விலையைகுறைத்தனர்.
ஆனால் தமிழக அரசு வாட் வரியை உயர்த்ததான் செய்தது. இரண்டு நாட்களில் சரக்கு லாரி கட்டணம் 25 சதவீதம் அதிகரிப்பது குறித்து முடிவு செய்கிறோம்.*ஜி.எஸ்.டி.,யில் பெட்ரோல், டீசல்தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும். சரக்கு வாகனம் மட்டுமல்ல, பணியாளர்களும் வாகனங்களில் தான் வருகிறார்கள். இதனால் தொழில் வணிகம், தனிநபர் பொருளாதார சுமை கூடும். மத்திய அரசு தினமும் விலை நிர்ணயிப்பதை கைவிட்டு முன்பு போல் 2 மாதம் ஒரு முறை நிர்ணயிக்க வேண்டும்.பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.,யில் சேர்க்க வேண்டும்.
விவசாயிகளுக்கு கடும் பாதிப்புமதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் முருகன் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு லாரி வாடகை உயரும். இதனால் காய்கறிகளை மார்க்கெட் கொண்டு வரும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். இதை காரணம் காட்டி காய்கறி விலையை உயர்த்தினால் மக்கள் வாங்க மாட்டார்கள். காய்கறி விற்பனை மந்தமாகி வீணாகதான் போகும். எனவே விவசாயிகளுக்கு தமிழக அரசு லாரி வாடகைக்கு மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE