பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி உள்தர உத்தரவாத குழு சார்பில் புதிய தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்களுக்குரிய புதிய பாடத்திட்டம் குறித்த ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரன் வரவேற்றார். துணை முதல்வர் கிருஷ்ணன், கலை பாடப்பரிவுகளின் புலத்தலைவர் ராஜசேகரன் பேசினர். புதிய பாடத்திட்டங்கள் குறித்து திருநெல்வேலி புனித சேவியர் கல்லுாரி முதல்வர் அல்போன்ஸ் மாணிக்கம் பேசினார். புலத்தலைவர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE