புதுச்சேரி : முதல்வர் நாராயணசாமி மக்களை முட்டாளாக்க நினைக்கிறார் என முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
அவர் அளித்த பேட்டி:பிரதமரின் புதுச்சேரி வருகை, மாநிலத்திற்கான மாற்றம், வளர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். முதல்வர் நாராயணசாமி, கட்சி தலைமை, மாநில மக்கள், காங்., கட்சி எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள், தொண்டர்களை ஏமாற்றி வருகிறார். நியமன எம்.எல்.ஏ.க் களுக்கு சுப்ரீம் கோர்ட், ஓட்டுரிமை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையரும் உறுதி செய்துள்ளார். முதல்வர் நாராயணசாமி மக்களையும், அரசியல் தலைவர்களையும் முட்டாளாக்க நினைக்கிறார்.இதை பா.ஜ., சட்ட ரீதியாக சந்திக்கும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை முதல்வர் எதிர்க்கிறாரா என கூற வேண்டும்.
ஆட்சி கலைத்தால், பா.ஜ., ஆட்சி அமைப்பது குறித்து, கூட்டணி தலைவர்களுடன் பேசி, கட்சி தலைமை முடிவு செய்யும்.பா.ஜ., மட்டும் தன் கட்சி சார்ந்த வர்களை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கவில்லை. காங்., ஆட்சி காலத்தில் காங்., கட்சியினர் தான் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்துள்ளனர்.கவர்னர் மாற்றம் நிர்வாக ரீதியான மாற்றம். அரசியல் ரீதியான மாற்றம் இல்லை. அடுத்தடுத்து புதுச்சேரி மாநிலத்திற்கு வளர்ச்சி கிடைக்கும்.காங்., கட்சி எம்.எல். ஏ.,க்களை தக்க வைக்க முடியாத முதல்வர், மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி வருகிறார். பா.ஜ., எந்த மாநில ஆட்சியையும் கலைத்தது இல்லை. காங்., கட்சி தான் 356வது பிரிவை பயன்படுத்தி, பல சட்டசபைகளை கலைத்துள்ள வரலாறு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE