காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு   | Dinamalar

பொது செய்தி

இந்தியா

காய்கறி விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு   

Added : பிப் 20, 2021
Share
காரைக்கால் : காரைக்காலில் காய்கறிகளின் விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். கடைமடை பகுதியான காரைக்காலுக்கு தமிழக பகுதியிலிருந்து தினம் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் இது வரை இல்லாத அளவிற்கு காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல்,

காரைக்கால் : காரைக்காலில் காய்கறிகளின் விலையேற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர்.

கடைமடை பகுதியான காரைக்காலுக்கு தமிழக பகுதியிலிருந்து தினம் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள் வருகின்றன. சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் இந்த பகுதியில் இது வரை இல்லாத அளவிற்கு காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேதனையில் கூறுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X