கல்லுாரி மாணவி தற்கொலை 

Added : பிப் 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவ கல்லுாரி 2ம் ஆண்டு மாணவி, துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுச்சேரி தர்மாபுரி, தனகோடி நகர் விரிவு, காமராஜர் வீதியைச் சேர்ந்த புத்துபட்டான். கர்நாடகா மாநில நவோதயா பள்ளியில் எலக்ட்ரிஷியனாக வேலை செய்கிறார். இவரது மனைவி அனிதா. காலாப்பட்டில் உள்ள தனியார் பள்ளி காசாளர். இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜோதிகா, 20;

புதுச்சேரி : மேட்டுப்பாளையத்தில் அரசு மருத்துவ கல்லுாரி 2ம் ஆண்டு மாணவி, துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி தர்மாபுரி, தனகோடி நகர் விரிவு, காமராஜர் வீதியைச் சேர்ந்த புத்துபட்டான். கர்நாடகா மாநில நவோதயா பள்ளியில் எலக்ட்ரிஷியனாக வேலை செய்கிறார். இவரது மனைவி அனிதா. காலாப்பட்டில் உள்ள தனியார் பள்ளி காசாளர். இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜோதிகா, 20; கதிர்காமம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், எம்.பி.பி.எஸ். 2ம் ஆண்டு படித்தார்.நேற்று முன்தினம் இரு மகள்களும் வீட்டில் தனியாக இருந்தனர். மதியம் 1 மணிக்கு, ஜோதிகா மாடி அறைக்கு சென்று அறை கதவை தாழிட்டு கொண்டார்.

உறவினர் அருணேஸ்வரன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன், கதவை உடைத்து பார்த்தபோது, ஜோதிகா, மின் விசிறியில் துாக்கில் தொங்கியுள்ளார். அவரை மீட்டு, ஜிப்மர் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்து, இறந்ததாக கூறினர்.ஜோதிகா அறையை மேட்டுப்பாளையம் போலீசார் ஆய்வு செய்த போது, அவர் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், என் சாவுக்கு யாரும் காரண மில்லை. மனதளவில் பாதித்துள்ளேன். யாருக்கும் தொல்லை கொடுக்க விரும்பவில்லை என எழுதியிருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X