விழுப்புரம் : சொத்து பிரச்னையில் இளம்பெண்ணை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தை சேர்ந்தவர் ஜோதி மனைவி சரளா,30; இவர், தனது கணவர் ஜோதி இறந்துவிட்டதால், கடந்த 10 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி குடும்ப சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு சரளா, தனது மாமனார் சாம்பேரியிடம் கேட்டார்.அதற்கு, ஜோதியின் அக்கா சந்திரிகா,38; அவரது கணவர் கலிங்கராஜ்,41; ஆகியோர் சேர்ந்து சரளாவை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இது குறித்த புகாரின்பேரில், கலிங்கராஜ், சந்திரிகா மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்துனா கலிங்கராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE