சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன், பணம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
சின்னசேலம், : சின்னசேலம் அருகே மொபைல்போன் திருடிய வழக்கில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் அடுத்த வடுகற்தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் ேஹமநாதன், 38; இவர் கனியாமூரில் ரைஸ்மில் நடத்தி வருகிறார். கடந்த 16 ம் தேதி இரவு 2 மணியளவில் ரைஸ்மில் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அலுவலகத்தில் இருந்த மொபைல் போன் மற்றும் ெஹட் செட், ஆயிரம் ரூபாய் பணத்தை

சின்னசேலம், : சின்னசேலம் அருகே மொபைல்போன் திருடிய வழக்கில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த வடுகற்தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் ேஹமநாதன், 38; இவர் கனியாமூரில் ரைஸ்மில் நடத்தி வருகிறார். கடந்த 16 ம் தேதி இரவு 2 மணியளவில் ரைஸ்மில் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அலுவலகத்தில் இருந்த மொபைல் போன் மற்றும் ெஹட் செட், ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். இது குறித்து புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.பின்னர், நேற்று காலை கனியாமூர் கைக்காட்டியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் போது, சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதிலை கூறியதால், காவல் நிலையம் கூட்டி சென்று விசாரித்தனர்.இதில் ேஹமநாதன் மில்லில் மொபைல் போன் திருடியதை ஒப்புக்கொண்டனர்.இதனையடுத்து, கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் நரிக்குறவன் காலனி பகுதியை சேர்ந்த மணி மகன் சின்ராசு,30; விருத்தாசலம் தாலுகா வேப்பூர் அடுத்த மண்மேடு பகுதியை சேர்ந்த குழந்தைவேலு மகன் அர்ஜூன் , 23; மற்றும் சங்கராபுரம் அடுத்த மாடாம்பூண்டி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோபி மகன் ராமு,19;ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X