மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற கடிதம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற கோரி, கவர்னரிடம் அன்பழகன் எம்.எல்.ஏ., கடிதம் அளித்துள்ளார். கடித விவரம்:முதல்வர் நாராயணசாமி, முன்னாள் கவர்னர் கிரண்பேடி இடையே இருந்த மோதல் போக்கால் அரசால் குறைந்த பட்சம் செயல்படுத்த வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் கூட கிடப்பில் போயின.நீங்கள் கவர்னராக பொறுப்பேற்றவுடன்,

புதுச்சேரி : தேர்தல் அறிவிப்பிற்கு முன்னதாக, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற கோரி, கவர்னரிடம் அன்பழகன் எம்.எல்.ஏ., கடிதம் அளித்துள்ளார்.

கடித விவரம்:முதல்வர் நாராயணசாமி, முன்னாள் கவர்னர் கிரண்பேடி இடையே இருந்த மோதல் போக்கால் அரசால் குறைந்த பட்சம் செயல்படுத்த வேண்டிய மக்கள் நலத் திட்டங்கள் கூட கிடப்பில் போயின.நீங்கள் கவர்னராக பொறுப்பேற்றவுடன், நிறுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர். சட்டசபை தேர்தல் அறிவிப்பதற்குள், தங்க ளால் முடிந்த அளவிற்கு, மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்க வேண்டும். 25 மாதத்திற்கான இலவச அரிசி அல்லது அதற்கான பணம் வழங்க வில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 மாத இலவச அரிசிக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.40 மாதங்களுக்கு மேலாக சம்பளம் வழங்காமல் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கும், அரசு சார்பு நிறுவனத்தில் பல பிரிவுகளில் பணியாற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மாநில அரசின் நிதி நிலைக்கேற்ப குறைந்தபட்ச நிதியுதவி வழங்க வேண்டும்.

தகுதியுடைய முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள 9,000 பணியிடங்களில் முடிந்தவரை தகுதியானவர்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X