பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி கவர்னர் மாளிகையில் வடமாநில ஊழியர்கள் நிரந்தரம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கவர்னர் மாளிகையில் பணியாற்றும் வட மாநிலங்களை சேர்ந்த 3 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டது அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி கவர்னராக கிரண்பேடி பதவி வகித்தபோது, அரசு துறைகளிலும், அரசு சார்பு நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள், 'டெபுடேஷன்' அடிப்படையில் அழைக்கப்பட்டு கவர்னர் மாளிகையில் பணிபுரிந்தனர்.கவர்னர் - முதல்வர்

புதுச்சேரி : கவர்னர் மாளிகையில் பணியாற்றும் வட மாநிலங்களை சேர்ந்த 3 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டது அரசு ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி கவர்னராக கிரண்பேடி பதவி வகித்தபோது, அரசு துறைகளிலும், அரசு சார்பு நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்கள், 'டெபுடேஷன்' அடிப்படையில் அழைக்கப்பட்டு கவர்னர் மாளிகையில் பணிபுரிந்தனர்.கவர்னர் - முதல்வர் மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், கவர்னர் மாளிகையில் அதிக ஊழியர்கள் பணியாற்றுவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். இதனால் பல ஊழியர்கள் அவர்களது பழைய அலுவலகங்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

பின், குறிப்பிட்ட ஊழியர்களை மட்டும் கவர்னர் மாளிகை பணிக்கு மீண்டும் அழைத்தனர். இதில், பாசிக் நிறுவனத்தில் பணியாற்றிய வட மாநிலங்களை சேர்ந்த 3 பேரும் அடக்கம். தொடர்ந்து பணி புரிந்த இந்த 3 ஊழியர்களையும் கவர்னர் மாளிகை பணியிடங்களில் பணி நிரந்தரம் செய்து, பிப்ரவரி 15ம் தேதியிட்ட உத்தரவை கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ளது. இது, அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.மண்ணின்மைந்தர்களுக்கு அநீதிபுதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்கள் கூட்ட மைப்பின் கவுரவ தலைவர் சேஷாச்சலம் கூறும்போது, 'அரசின் பல்வேறு துறைகளிலும், அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு நிர்வாகத்தால் பல மாதங்களாக சம்பளம் தர முடிய வில்லை.

பணியாற்றும் தினக்கூலி, பகுதி நேர ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை. இதனால், உள்ளூரை சேர்ந்த ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது.இந்நிலையில், பாசிக் நிறுவனத்தில் இருந்து 'டெபுடேஷன்' அடிப்படையில் கவர்னர் மாளிகையில் பணி புரியும் வடமாநில ஊழியர்கள் முன் தேதியிட்டு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இது, புதுச்சேரியை சேர்ந்த தினக்கூலி, பகுதி நேர ஊழியர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியாகும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X