புதுச்சேரி : நியமன எம்.எல்.ஏ.,க் களை பா.ஜ., என குறிப்பிட்டது குறித்து கவர்னரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி காங்., அலுவலகத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. காங்., மாநில தலைவர் சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி, தி.மு.க., தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வெங்கடேசன் எம்.எல்.ஏ., உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்திற்கு பின் முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி:எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி அளித்த கடிதத்தின் அடிப்படையில் பெரும்பான்மை நிரூபிக்க கவர்னருக்கு கடிதம் அளித்துள்ளார்.
அதில், நியமன எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., என குறிப்பிட்டுள்ளார். சட்ட மன்ற பதிவேட்டில் நியமன எம்.எல்.ஏ.,க்களை பா.ஜ., என குறிப்பிடவில்லை. நியமன எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., என்பதில் ஆதாரம் அளிக்கவில்லை.கவர்னர் அளித்த கடிதத் தில் நியமன எம்.எல். ஏ.,க் கள் பா.ஜ., என குறிப்பிட்டுள்ளது வரலாற்று தவறு. இது குறித்து விளக்கம் தர கவர்னருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். கட்சித் தாவல் தடை சட்டத்தில் உள்ள பிரிவில் நியமன எம்.எல்.ஏ., வாக நியமிக்கப்பட்டவர்கள், 6 மாதத்திற்குள் கட்சியின் பெயரை சேர்க்க உரிமை உண்டு.
சேர்க்காவிட்டால் அவர் நியமன எம்.எல்.ஏ., மட்டும் தான்.இது பற்றி சபாநாயகரிடம் பேசுவேன். வரும் 21ம் தேதி காங்., தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல். ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் நிலைப் பாடு பற்றி முடிவு எடுக்கப்படும். புதுச்சேரி வந்த ராகுலிடம் சோலை நகர் பகுதி மீனவ பெண்மணியின் பேச்சை பொய்யாக மாற்றி கூறியதாக சர்ச்சை எழுந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
காங்., கட்சியில் இருந்து சென்று பா.ஜ.,வில் இணைந்தவர்களும், பா.ஜ., கட்சியினரும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்னர். நிவர் புயலின் போது அங்கு சென்று, படகுகளை பாதுகாப்பாக வைக்க உத்தர விட்டேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. என்னிடம் மோத வேண்டுமானால் நேரடியாக மோதவேண்டும். சமூக வலைத்தளத்தில் என் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க நினைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE