பொது செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டையில் திருமண உதவி திட்டம் 298 பேருக்கு அமைச்சர், எம்.எல்.ஏ., வழங்கல்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் 298 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்ேபட்டையில் 298 பயனாளிகளுக்கு 1.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ.. வழங்கினர். நிகழ்ச்சியில் கலெக்டர் கிரண்குராலா, ஆர்.டி.ஓ. சாய்வர்தணி, தாசில்தார்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் 298 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கத்தை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்ேபட்டையில் 298 பயனாளிகளுக்கு 1.12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாலிக்கு தங்கத்தை அமைச்சர் சண்முகம், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ.. வழங்கினர். நிகழ்ச்சியில் கலெக்டர் கிரண்குராலா, ஆர்.டி.ஓ. சாய்வர்தணி, தாசில்தார் கோபாலகிருஷ்ணன்,கூட்டுறவு சர்க்கரை ஆலை இணையத் தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.

அ.தி.மு.க,.பிரபு எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ.. அழகுவேல்பாபு, ஒன்றிய செயலாளர்கள் மணிராஜ், பழனிவேல், ஏகாம்பரம், சந்திரன், செண்பகவேல், ராமலிங்கம், நகரச் செயலாளர்கள் துரை, பாபு, முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் சாய்ராம், ஸ்ரீவிநாயகா கல்வி குழுமத் தலைவர் நமச்சிவாயம், ஜெ.பேரவை மாவட்டச் செயலாளர் ஞானவேல், மாணவரணி மாவட்ட துணைச் செயலாளர் பழனிமலை, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சம்பத், நீலாவதிபாண்டியன், மதியழகன், செல்வராஜ், பழனி, பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர்கள் ராமசாமி, ஜீவானந்தம், வழக்கறிஞர்கள் அன்புச்செல்வன், திலீப்.முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் செல்வகுமார், அய்யூப்அலி, ஜெயச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் பூட்டோ, ஜகாங்கீர், வார்டு செயலாளர்கள் பூக்கடை முருகன், வெங்கடேசன், எம்.ஜி.ஆர். மன்ற நகர துணைச் செயலாளர் பாண்டியன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமலிங்கம், ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X