மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் | Dinamalar

மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் 

Added : பிப் 20, 2021
Share
புதுச்சேரி : புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி சுகாதார இயக்கக ஊழியர்கள் நலசங்கம், பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலசங்கம், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நலசங்கத்தினர் ஊதிய உயர்வு வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று

புதுச்சேரி : புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி சுகாதார இயக்கக ஊழியர்கள் நலசங்கம், பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலசங்கம், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நலசங்கத்தினர் ஊதிய உயர்வு வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன் தலைமை தாங்கினார்.

அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாசலம் கண்டன உரை ஆற்றினார். சங்க பொருப்பாளர்கள் வாணிதாசன், வெற்றிவேல், புருஷோத்தமன்,தேவன், பிரகதீஸ்வரன், வினோத், பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X