புதுச்சேரி : சாலை பாதுகாப்பு மாத போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் கடந்த மாதம் 18 ம் தேதி முதல் சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்பட்டது. விபத்துகளை குறைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஆன் லைன் வாயிலாக வினாடி வினா, ரங்கோலி, ஓவியம், விபத்து குறைக்க திட்ட அறிக்கை போட்டி நடந்தது. வீராம்பட்டிணம் கடற்கரையில் மணல் சிற்பம் மூலம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார்.
துணை ஆணையர் சத்தியமூர்த்தி, மண்டல போக்குவரத்து அதிகாரிகள் சீத்தாராம ராஜூ, பிரபாகர ராவ், அங்காளன், முதுநிலை கணக்கு அதிகாரி அன்பழகன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE