விழுப்புரம் : விழுப்புரம் சரக புதிய டி.ஐ.ஜி., யாக பாண்டியன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., எழிலரசன், சென்னை பெருநகர வடக்கு போக்குவரத்து இணை ஆணையராக இடமாற்றம்செய்யப்பட்டார். அங்கிருந்த இணை ஆணையர் பாண்டியன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டார்.அவர் நேற்று பொறுப்பேற்றார். பின், அவர் நிருபர்களிடம் கூறுகையில்' விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சிமாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் சரகத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை பகுதி அதிகமாக உள்ளதால், விபத்துக்களை குறைப் பதற்கு ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE