காட்டுமன்னார்கோவில் : போலீஸ் துறை மற்றும் அதிகாரிகளை விமர்சித்து 'வாட்ஸ் ஆப்'பில் ஆடியோ வெளியிட்ட இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
காட்டுமன்னார்கோவிலில் கடந்த 11ம் தேதி சாலை விரிவாக்கப் பணியின் போது, எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத் தலைவர் இளங்கீரனை, காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ராஜா, இழுத்துச் சென்று கைது செய்தார். இதனை கண்டித்து விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பலரும், இன்ஸ்பெக்டர் ராஜா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினர்.இதனால் கோபமடைந்த இன்ஸ்பெக்டர், காவல் துறை மற்றும் உயர் அதிகாரிகள், சக போலீசாரை விமர்சித்து பேசி 'வாட்ஸ் ஆப்'பில் ஆடியோ பதிவிட்டார். இது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இந்நிலையில், நேற்று காலை, இன்ஸ்பெக்டரை அழைத்து, ஆடியோ குறித்து எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ராஜா, ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE