பொது செய்தி

இந்தியா

ட்ரோன்களை பயன்படுத்த வேளாண் அமைச்சகத்துக்கு அனுமதி!

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புது டில்லி: நாடு முழுவதும் கிராம பஞ்சாயத்து அளவில் விவசாய உற்பத்தியை மதிப்பிட வேளாண் துறை ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி தந்துள்ளது.பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நாட்டின் 100 மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து அளவிலான விவசாய பகுதிகளில் மகசூல் மதிப்பீட்டிற்காக ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி

புது டில்லி: நாடு முழுவதும் கிராம பஞ்சாயத்து அளவில் விவசாய உற்பத்தியை மதிப்பிட வேளாண் துறை ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி தந்துள்ளது.latest tamil newsபிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நாட்டின் 100 மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து அளவிலான விவசாய பகுதிகளில் மகசூல் மதிப்பீட்டிற்காக ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி தந்துள்ளது. இந்த அனுமதி ஓராண்டுக்கு செல்லுப்படியாகும். அதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.


latest tamil news


அந்த வழிகாட்டுதல்களில் கூறியுள்ளதாவது: வேளாண் அமைச்சகம் ட்ரோன்களை இயக்க உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம். குறிப்பிடப்பட்டுள்ள ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும். 200 அடி உயரத்துக்குள் ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும். சூரிய உதயம் தொடங்கி சூரிய மறைவுக்குள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும். ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்களின் பாதுகாப்புக்கு வேளாண் அமைச்சகமே பொறுப்பு. இது போன்ற 19 வழிகாட்டுதல்களை கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-பிப்-202109:19:46 IST Report Abuse
ஆரூர் ரங் பல கள்ளப்பண அரசியல் வியாபாரப் பிரமுகர்கள் லஞ்ச ஊழல் பணத்தை விவசாய வருமானமாக பொய்க் கணக்கு ☻காட்டுகிறார்கள். ஏக்கருக்கு 9 கோடி லாபம் காண்பித்த பாவார் மகளும் ஏக்கருக்கு 7 டன் ஆப்பீள் விளைந்த இமாச்சல் மு முதல்வர் வீரபத்ரா🤔 சிங்கும் உதாரணங்கள். பாவப்பட்ட விவசாயியிடம் தானியம் வாங்கி அரசு DPC இல் கூடுதல் ஆதாரவிலைக்கு விற்று தன்னுடைய விளைச்சலாக கணக்குக் காட்டி☻ கருப்பை☻ வெள்ளையாக்குகிறார்கள்.ஆனால் இதுபோல டுரொன்களை வைத்து ஆய்வு செய்தால் மாட்டிக்கொள்வர். ஆடிக்கார் அய்யாக்கண்ணு, திக்காயத் போன்றவர்களை விட்டு டுரோன் எதிர்ப்புப்😉😉 போராட்டத்தைத் துவக்குவர்
Rate this:
Cancel
Kalai Arashan - Quito,ஈக்வடார்
20-பிப்-202109:17:54 IST Report Abuse
Kalai Arashan அழிக்கனும்னு முடிவுப்பண்ணிட்டானுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X