திட்டக்குடி : திட்டக்குடி தாலுகா அலுவலக வளாகத்தில், பராமரிப்பின்றி பாழாகி வரும் காத்திருப்போர் கூடத்தை, சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திட்டக்குடி தாலுகாவில் 109 வருவாய் கிராமங்கள் உள்ளன. திட்டக்குடி தாலுகா அலுவலகத்திற்கு நீண்ட தொலைவிலுள்ள லட்சுமணாபுரம், கொரக்கவாடி, சிறுமங்கலம் கிராமங்களிலிருந்து பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.தாலுகா அலுவலகத்திற்கு வரும் மக்கள், அதிகாரிகள் வரும் வரை காத்திருக்க இடம் இன்றியும், குடிநீர் இன்றியும் தவித்தனர்.பொதுமக்களின் நலன்கருதி தாலுகா அலுவலக வளாகத்தில், கடந்த 2014ம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் மதிப்பில் காத்திருப்போர் கூடம் கட்டப்பட்டது.
இங்கு பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக வைக்கப்பட்ட இயந்திரம் சில நாட்கள் மட்டுமே இயங்கியது.இந்த கூடத்தில் இருக்கை வசதிகூட இல்லாத நிலையில், துப்புரவு செய்யக்கூட ஆட்கள் இல்லாததால் அசுத்தமாக உள்ளது. காத்திருப்போர் கூடத்தை முறையாக பராமரிக்கவும், மின்விசிறி, இருக்கை, மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE