மந்தாரக்குப்பம் : குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ரதசப்தமி விழாவையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனையொட்டி, நேற்று காலை 5:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. 9:00 மணிக்கு கருட வாகன அலங்காரத்தில் வீதியுலாவும், 12:00 மணிக்கு திருமஞ்சனம், மதியம் 1:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் மகா அபிேஷகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE