பொது செய்தி

தமிழ்நாடு

26ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கடலுார் : கொரோனா பாதிப்பால், கடந்த மார்ச் மாதம் முதல் கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேரடியாக நடத்தப்படாத நிலையில், வரும் 26ம் தேதி முதல் நேரடியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், மாதம் தோறும் 4ம் வெள்ளிக் கிழமையன்று கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவலைத் தடுக்க, அரசு

கடலுார் : கொரோனா பாதிப்பால், கடந்த மார்ச் மாதம் முதல் கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேரடியாக நடத்தப்படாத நிலையில், வரும் 26ம் தேதி முதல் நேரடியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம், மாதம் தோறும் 4ம் வெள்ளிக் கிழமையன்று கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படுவது வழக்கம். கொரோனா பரவலைத் தடுக்க, அரசு உத்தரவின் பேரில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், விவசாயிகளின் குறை, சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டது.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சில மாதங்களாக 'ஆன்லைன்' மூலம், குறைகேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதன்படி, விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண் அலுவலகத்திற்குச் சென்று, காணொலி வாயிலாக, கலெக்டரிடம் தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனாலும், ஆன்லைன் குறைகேட்பில் திருப்தியில்லை, மேலும், கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்துகின்றனர்.அதிகாரிகள் கூட்டம் நடத்துகின்றனர். கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டமும் நடத்தப்படுகிறது. அதேபோன்று, சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்து, மாதாந்திர விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நேரடியாக நடத்த வேண்டும் என, விவசாயிகள் சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த இரண்டு வாரமாக திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேரடியாக நடத்தப்பட்டு வரும் நிலையில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தையும் நேரடியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வரும் 26ம் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடத்தப்படும் என, கலெக்டர் சந்திரசேகர சகாமுரி அறிவித்துள்ளார்.கடலுார் மாவட்ட விவசாயிகள் அன்றைய தினம் காலை 10:30 மணியளவில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்கலாம். தாங்கள் வைக்கும் கோரிக்கைகளை காலை 8:00 மணி முதல் 10:15 மணிக்குள் பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்க உள்ள துறையின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். விவசாயிகளுக்கு நேரடியாக அதிகாரிகள் பதலளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், இந்த வாய்ப்பை கடலுார் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X