கடலுார் : கடலுார் மாவட்ட நுாலகங்களில் வாசகர்களை அனுமதிக்க வேண்டும் என, திருக்குறள் பேரமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.
பேரமைப்பு தலைவர் முத்துக்குமரனார் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட நுாலக அலுவலர் பால சரஸ்வதியை சந்தித்து அளித்த மனு:கொரோனாவால் கடந்த ஓராண்டாக, பத்திரிகைகள் படிக்க வாசர்களை நுாலகங்களில் அனுமதிக்கவில்லை, தற்போது அரசின் முயற்சியினால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அரசு பல தளர்வுகளை அனுமதித்துள்ளது.இந்நிலையில் நுாலகத்தில் பத்திரிகைகளைப் படிக்க சமூக இடைவெளியுடன் வாசகர்களை அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE