பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயக் கடன் தள்ளுபடி பட்டியல் தயாரிப்பு தீவிரம்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக, பயனாளிகள் பட்டியலை ஆய்வு செய்ய, விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் குழு கடலுார் வந்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையை முதல்வர் பழனிசாமி தள்ளுபடி செய்து, கடந்த 5ம் தேதி சட்டசபையில் அறிவித்தார்.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் 90 ஆயிரத்து 161 விவசாயிகளுக்கு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக, பயனாளிகள் பட்டியலை ஆய்வு செய்ய, விழுப்புரம் மாவட்ட அதிகாரிகள் குழு கடலுார் வந்துள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையை முதல்வர் பழனிசாமி தள்ளுபடி செய்து, கடந்த 5ம் தேதி சட்டசபையில் அறிவித்தார்.அதன்படி, கடலுார் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் 90 ஆயிரத்து 161 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடி செய்ய 592.45 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் 159 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில், தகுதியான விவசாயிகள் பட்டியலை தயார் செய்ய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், பயனாளிகள் பட்டியலின் உண்மைத் தன்மை அறிய, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சார் பதிவாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமையில் 60 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.அதேபோன்று, கடலுார் மாவட்டதில் இருந்து அதிகாரிகள் குழு பிற மாவட்டங்களுக்கு சென்றுள்ளதாக, கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் இளஞ்செல்வி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X