பொது செய்தி

தமிழ்நாடு

மினி கிளினிக்கில் பணிபுரிய நேர்க்காணல்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மினி கிளினிக்கில் பணிபுரிய டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடந்தது. கடலுார் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், மினி கிளினிக்கில் பணிபுரிய டாக்டர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 66 டாக்டர்கள் உள்ளிட்ட மொத்தமுள்ள 396

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மினி கிளினிக்கில் பணிபுரிய டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடந்தது.

கடலுார் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், மினி கிளினிக்கில் பணிபுரிய டாக்டர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 66 டாக்டர்கள் உள்ளிட்ட மொத்தமுள்ள 396 பணியிடங்களுக்கு, டாக்டர் பணிக்கு 207, செவலியர் பணிக்கு 508, பல்நோக்கு பணியாளர் பணிக்கு 666 பேர் விண்ணப்பித்திருந்தனர்.அவர்களுக்கு நேற்று கடலுார் பீச்ரோட்டில் உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் நேர்காணல் நடந்தது.

சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், குடும்ப நல இணை இயக்குனர் ரமேஷ்பாபு தலைமையில் நேர்காணல் நடத்தப்பட்டது.கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலுார் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நேர்காணலில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X