கடலுார : மாநில அளவிலான ேஹண்ட் பால் போட்டியில் பங்கேற்கும் கடலுார் மாவட்ட அணி வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
சேலம், மேச்சேரியில் மாநில அளவிலான 2 நாள் ேஹண்ட்பால் போட்டி இன்று 20ம் தேதி துவங்குகிறது. தமிழக ேஹண்ட்பால் கழகம், சேலம் மாவட்ட ேஹண்ட்பால் கழகம் இணைந்து நடத்தும் இப்போட்டியில் பங்கேற்கும் கடலுார் மாவட்ட அணி வீரர்களை அண்ணா விளையாட்டரங்கில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதுச்சேரி பயிற்றுனர் கார்த்திகேயன், மாவட்ட ேஹண்ட்பால் கழக இணைச் செயலர்கள் பாபு, செங்குட்டுவன், உடற்கல்வி ஆசிரியர் விமல் ஆகியோர் தேர்வு செய்தனர்.தேர்வு செய்யப்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட ேஹண்ட்பால் கழகத் தலைவர் சந்திரசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் சீருடை வழங்கினர். மாவட்டச் செயலாளர் அசோகன் உடனிருந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE