புதுச்சத்திரம் : புதுச்சத்திரம் அருகே பெண்ணைத் தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சத்திரம் அடுத்த அன்னப்பன்பேட்டையைச் சேர்ந்தவர் ரவி மனைவி மாசிலா, 38; அதே பகுதியைச் சேர்ந்தவர் கருத்தப்பிள்ளை. இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.இதில், ஆத்திரமடைந்த கருத்தப்பிள்ளை, மனீஷ், ராஜேந்திரன், அருள், அன்பரசன், ஜனா ஆகியோர் மாசிலாவைத் தாக்கினர்.புகாரின் பேரில், கருத்தப்பிள்ளை உட்பட 6 பேர் மீது புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE