சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவொற்றியூர் மூதாட்டி கொலை; 'காமவெறி' கார்பென்டர் சிக்கினார்

Added : பிப் 20, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை, திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, அரசு மருத்துவனை வளாகத்தில், சில தினங்களுக்கு முன், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, தலை மற்றும் பிறப்புறுப்பில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.மருத்துவமனை ஊழியர்கள், மூதாட்டிக்கு முதலுதவி அளித்து,
 திருவொற்றியூர் மூதாட்டி கொலை; 'காமவெறி' கார்பென்டர் சிக்கினார்

மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, அரசு மருத்துவனை வளாகத்தில், சில தினங்களுக்கு முன், 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, தலை மற்றும் பிறப்புறுப்பில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டார்.

மருத்துவமனை ஊழியர்கள், மூதாட்டிக்கு முதலுதவி அளித்து, ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்து மூதாட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவொற்றியூர் போலீசார் விசாரித்தனர்.

இறந்த மூதாட்டி, திருவொற்றியூரைச் சேர்ந்த கிருஷ்ணவேனி, 70, என, தெரியவந்தது. 'சிசிடிவி' கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்ததில், சம்பவம் நடந்த தினத்தன்று, மூதாட்டி கடை வீதிக்கு வந்துள்ளார்.அப்போது, மருத்துவமனை வளாகம் அருகே, குடிபோதையில் நின்றிருந்த வாலிபர், மூதாட்டியை இருட்டான இடத்திற்கு, வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

பின், அரை மணி நேரம் கழித்து, வாலிபர் மட்டும் பதற்றமாக வெளியேறும் காட்சியும், அதே கேமராவில் பதிவாகியது தெரிந்தது. இதை ஆதாரமாக வைத்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். எண்ணுார் விரைவு சாலையில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை, தொடர்ச்சியாக ஆய்வு செய்த போது, வாலிபர், லாரி ஒன்றில் ஏறிச்சென்று, தாழங்குப்பம் சந்திப்பில் இறங்கியது தெரியவந்தது.

இதை அடிப்படையாக வைத்து, இந்த கொலையில் துப்பு துலங்கியது. நேற்று முன்தினம் இரவு, கொலையை செய்த, எண்ணுார், சத்தியவாணி முத்து நகரைச் சேர்ந்த ஜெயகுமார், 33, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

மது போதையில், மூதாட்டியை இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற போது, அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, காட்டிக் கொடுத்து விடுவார் என்ற பயத்தில், கட்டையால் சரமாரியாக தாக்கியதுடன், தலையில் கல்லை போட்டு விட்டு தப்பியதாக, அவர் ஒப்புக் கொண்டார். போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Engineer - California,யூ.எஸ்.ஏ
25-பிப்-202106:08:33 IST Report Abuse
Engineer Effect of Tasmac and cinema.....if a guy cant leave 70 year old, what can we say? மூதாட்டியை தாயாய் மதிக்க வேண்டியவன் பண்ற காரியத்தை பார்த்து வெக்கம் வருகிறது.......... போகிற போக்கில் சிறு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மதிப்பு இல்லை..... நமது நாடு திரும்பி போய் கொண்டு இருக்கிறது..........
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
24-பிப்-202120:00:42 IST Report Abuse
Krishnamurthy Venkatesan அனைவரும் வெட்கப்பட வேண்டிய விசயம்.
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
24-பிப்-202106:28:01 IST Report Abuse
Swaminathan Chandramouli தற்போதைய ஆட்சியில் தான் சிறார் கற்பழிப்பு , சங்கிலி அறுப்பு , மொபைல் போன் திருட்டு , பெண்கள் கற்பழிப்பு , , கணவன் மனைவியை கொலை செய்வது , மனைவி தன கள்ள காதலனுடன் கூட்டு சேர்ந்து கணவன் தலையில் கல்லை போட்டு சாகடித்தல் இளம்பெண்களை ரவுடிகள் கூட்டாக கற்பழித்து கடாசுதல் , அரசாங்க அதிகாரிகள் அளவுக்கு மீறி லஞ்சம் வாங்கி சொத்து சேர்ப்பது ஹிந்து கோவில்களை கொள்ளையடித்து , உண்டியல்களை உடைத்தல் , சாமி சிலைகளை அடியோடு பெயர்த்து காசு பார்த்தல் இவை அதிகாரிகளின் ஆதரவோடு அரங்கேறுதல் இவை நடக்கின்றன கேட்பார் யாருமில்லை
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
24-பிப்-202119:29:39 IST Report Abuse
vadiveluஆரம்பித்து வைத்தவர்கள் இப்போது ......., ஆகையால் கேட்க மாட்டார்கள்.கேட்டால் பெரிய லிஸ்ட் பெரிய இடத்தில இருந்தே ஆர்மபிக்கும்....
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
24-பிப்-202120:54:03 IST Report Abuse
TamilArasanஇதற்கெல்லாம் காரணம் சொரியார் ராமசாமி போட்டு சென்ற விதை......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X