வாயலுார் இருளர்களின் வாழ்வு மேம்பட, முதற்கட்டமாக, விளையாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த, வாயலுார், காரைத்திட்டு பகுதியில், இருளர்கள் வசிக்கின்றனர்.வாழ்வாதார தொழிலாக, சுற்றுப்புற பகுதியில்மரம் வெட்டுகின்றனர்;கூலி வேலைகள் செய்கின்றனர்.இவர்களின் குழந்தைகளும், கல்வி, விளையாட்டு, வாழ்க்கையில் முன்னேற்றம் போன்றவற்றை பெற விரும்பாமல், பாரம்பரிய தொழிலையே பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில், 'அலை' பவுண்டேஷன் தன்னார்வ நிறுவனம், இருளர்களின் கல்வி, வாழ்வியல் முன்னேற்றத்தை மேம்படுத்த முடிவெடுத்தது.இதன் துவக்கமாக, இருளர், சிறுவர் - சிறுமியர், வாலிபர்களுக்கு, விளையாட்டு பயிற்சி அளித்தது. பயிற்சியாளர் அலோசிஸ் விஜயகுமார், கைப்பந்து உள்ளிட்ட பயிற்சிகளை, அவர்களுக்கு ஒரு மாதம் அளித்தார்.நேற்று முன்தினம், சிறப்பு விருந்தினர், பெண்கள் கூடைப்பந்து விளையாட்டு புரோமோட்டர், ஆஷ்ரிதாதேவி தல்லுாரி, முன்னாள் ஊராட்சித் தலைவர் அப்துல்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவற்றில் அவர்களுக்கான கைப்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வென்றவர்களுக்கு சான்றிதழ், சீருடைகள் வழங்கப்பட்டன.படிப்படியாக மாற்றுவோம்இருளர்களிடம், பாரம்பரிய தொழில் பழக்கமே, தற்போதும் உள்ளது. அவர்களின் பழக்கத்தை முதலில் மாற்றியே, கல்வி, வேலைகள் சார்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். விளையாட்டு பயிற்சிகளில் அவர்களை முதலில் ஈர்த்து, படிப்படியாக மற்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்த உள்ளோம்.பி.செரினா, 'அலை' நிறுவன நிறுவனர், வாயலுார்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE