பொது செய்தி

இந்தியா

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் இந்தியா ஐ.நா.,வுக்கு கண்டனம்

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 20, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஐ.நா., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.மனித உரிமைகளுக்கான, ஐ.நா. துாதரக அலுவலகத்தின் இணைய தளத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அவற்றில் கூறப்பட்டிருந்ததாவது: ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை,

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஐ.நா., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகளுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



latest tamil news


மனித உரிமைகளுக்கான, ஐ.நா. துாதரக அலுவலகத்தின் இணைய தளத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இரண்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. அவற்றில் கூறப்பட்டிருந்ததாவது: ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, இந்தியா தன்னிச்சையாக ரத்து செய்து, புதிய சட்டங்களை அமல்படுத்திஉள்ளது. இதனால் அங்கு, முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மையினர், அரசியலில் பங்கேற்பது குறைந்துவிட்டது.இவ்வாறு, அவற்றில் கூறப்பட்டிருந்தது.


latest tamil news


இந்த அறிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து, வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஸ்ரீ வஸ்தவா நேற்று கூறியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கு, பல நாடுகளின் துாதர்கள் சமீபத்தில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வை சீர்குலைக்கும் நோக்கில் தான், இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறந்து விட்டு, அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீருக்கு, வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, பார்லிமென்ட் ஒப்புதலுடன் ரத்து செய்யப்பட்டதை, அறிக்கை வெளியிட்டவர்கள், வசதியாக மறந்துஉள்ளனர். பாரபட்சமான இந்த அறிக்கைகளை இந்தியா நிராகரிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mathimandhiri - chennai,இந்தியா
21-பிப்-202113:58:54 IST Report Abuse
mathimandhiri வாழ்க நேருவின் புகழ், வளர்க அன்னாரது கொள்கை. இப்படிக்கு..சப்பை மூக்கன்.
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
21-பிப்-202113:57:35 IST Report Abuse
mathimandhiri va
Rate this:
Cancel
Sivaram - Chennai,இந்தியா
21-பிப்-202101:52:31 IST Report Abuse
Sivaram ஏதோ ஒரு நாட்டின் லாபத்திற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் தங்களுடைய படைகளை வலிமை படுத்திக்கொள்ள வேண்டும். ஏன் ஒன்இந்தியா என்பது ஒன் அகண்டபாரதமாக இருக்கக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X