பார்க்கத்தான் கரடு முரடாக இருக்கிறீர்கள்., இயல்பில் மென்மை இதயம்

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 20, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சாத்துார் பட்டாசு விபத்தில் தாய், தந்தையை இழந்துள்ள சிறுமி நந்தினிக்கு தேவையான உதவிகளை, படிப்பு செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். அந்த குழந்தை மீது தனி கவனம் செலுத்தி, எங்கள் வீட்டு பிள்ளையாக கவனித்துக் கொள்வோம். அந்த குழந்தையை ஏற்றுக் கொள்வது எங்கள் பொறுப்பு.- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி'பார்க்கத் தான் கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறீர்கள்; இயல்பில், மென்மை இதயம்
பார்க்கத்தான் கரடு முரடாக இருக்கிறீர்கள்., இயல்பில் மென்மை இதயம்

சாத்துார் பட்டாசு விபத்தில் தாய், தந்தையை இழந்துள்ள சிறுமி நந்தினிக்கு தேவையான உதவிகளை, படிப்பு செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம். அந்த குழந்தை மீது தனி கவனம் செலுத்தி, எங்கள் வீட்டு பிள்ளையாக கவனித்துக் கொள்வோம். அந்த குழந்தையை ஏற்றுக் கொள்வது எங்கள் பொறுப்பு.
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


'பார்க்கத் தான் கொஞ்சம் கரடு முரடாக இருக்கிறீர்கள்; இயல்பில், மென்மை இதயம் படைத்தவராக இருப்பீர் போலிருக்கிறதே...' என, பாராட்டத் தோன்றும் வகையில், தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி.



உலகில் பெட்ரோல், டீசலின் விலை குறைந்து வரும் நிலையில், நம் நாட்டில் மட்டும் அதிகரிக்கிறது. இதை, வாடகை வாகன உரிமையாளர்களால் சமாளிக்க முடியவில்லை. எனவே, அடுத்த மாதம், 3ம்தேதி முதல், தற்போதுள்ள வாடகையிலிருந்து, 30 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.
- லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முருகன் வெங்கடாசலம்


'எப்போ விலை உயரும், கட்டணத்தை உயர்த்தலாம் எனக் காத்திருந்தீர்களோ...' என, கவலை தெரிவிக்கத் தோன்றும் வகையில், லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் முருகன் வெங்கடாசலம் பேட்டி.



மத்திய அரசு, சி.பி.எஸ்.இ., பாடப்பிரிவுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது. அதன் அடிப்படையில், தமிழக அரசும், பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை பட்டியலை தயாரித்து, முதல்வரின் ஒப்புதலோடு வெளியிட்டுள்ளது.
- அமைச்சர் செங்கோட்டையன்


latest tamil news




'நீங்கள் எந்த பேட்டி அளித்தாலும், உடனே நிறைய கட்சிக்காரர்களும், பின்னால் ஏராளமான பிரமுகர்களும் நிற்கின்றனரே எதற்காக...' என, கேட்கத் தோன்றும் வகையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.



தலைமை எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் போட்டியிட தயாராக உள்ளேன். அ.தி.மு.க.,வில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. ஆதாயம் தேட வேண்டும் என்றே சிலர், அ.தி.மு.க.,வில் கருத்து வேறுபாடு உள்ளதாக கூறி வருகின்றனர்.
- அமைச்சர் நடராஜன்


'கருத்து வேறுபாடு இருந்தாலும், அதை காட்டிக் கொள்ளாமல் உள்ளனர்; அதுவே பெரிய சாதனை தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக சுற்றுலா துறை அமைச்சர் நடராஜன் பேட்டி.



மத்திய அரசு ஆண்டுதோறும், பத்ம விருதுகளை வழங்குகிறது. மக்கள் தொகையில், 60 சதவீதமாக உள்ள விவசாயிகளுக்கு, இவ்விருதை, அரசு கிள்ளி தான் கொடுக்கிறது.சினிமா துறையினருக்கு தான், பத்ம விருதுகள் அதிகம் கொடுக்கப்படுகிறது. விவசாயிக்கு நாட்டில் அவ்வளவு தான் மரியாதை.
- கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி


'உண்மை தான். சினிமா தவிர்த்து, விவசாயம் போன்ற துறைகள், மத்திய அரசுக்கு தெரிவதில்லையோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பேட்டி.


Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
21-பிப்-202119:24:42 IST Report Abuse
மனிதன் ஆமா பாராட்டத்தான் தோணும்...
Rate this:
Cancel
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
21-பிப்-202108:45:57 IST Report Abuse
iconoclast நீயெல்லாம் ஒரு பால்வள துறை அமைச்சர்..உன்னால மத்திய அரசை எதிர்த்து ஒரு குரல் கொடுக்க முடியல..நீ பேசாம அந்த ஜல்ஸா பார்ட்டியில் உன்ன இணைத்து ஆதாயம் அடைஞ்சிக்கோ
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
20-பிப்-202117:12:29 IST Report Abuse
வெகுளி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்ற ஈர மனம் படைத்தவர்கள் இன்னும் அரசியலில் இருப்பது ஆறுதலளிக்கிறது....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
21-பிப்-202101:42:56 IST Report Abuse
தல புராணம்பால்ல கலந்த தண்ணி அம்புட்டு தான்.. லஞ்சம் வாங்கிட்டு பட்டாசு தொழிற்சாலையின் பாதுகாப்பு பத்தி கவலைப்படாத ஒரு கும்பல்.....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
21-பிப்-202101:44:00 IST Report Abuse
தல புராணம்// எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது// ஆண்டு தோறும் தவறாமல் "எதிர்பாராத விதமாக" விபத்துக்கள் ஏற்படுவது எப்படி ?? அவங்களுக்கு அவங்களே கட்டிக்கொள்ளும் சமாதி.. லஞ்சம் வாங்கி கொண்டு பாதுகாப்பு விதிகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் கேடுகெட்ட அரசு ஊழியன்.. லஞ்சம் கொடுத்து பாதுகாப்பு விதிகளை ஓரம் தள்ளிவிட்டு காசு பார்க்கும் பட்டாசு ஆலை அதிபரோ, இல்லை சிறு முதலாளியோ.. கஞ்சிக்கு உழைக்கும் கூட்டம்.. அதில் எவன் செத்தால் என்ன என்கிற லஞ்சக்கூட்டம்.. இறந்தவனுக்கு அஞ்சோ பத்தோ கொடுத்து கண்ணை மூடிவிட்டு மறுபடியும் அதே கொலைக்களம், அதே லஞ்ச ஊழல். பயனிஸ்ஸாமி வந்து ஆளுக்கு லட்சம் ரூபான்னு கூவுவாரு பாருங்க.. லஞ்சம் வாங்குன அரசாங்க ஊழியன் உண்டியல்லே காசு போட்டு பாவத்துக்கு பரிகாரத்தை வாங்கிடுவான்.. ஏழை குடும்பமும், ஒரு வாய்க்கு இனிமேல் சோறு போங்க வேண்டியதில்லைன்னு நிம்மதியடையும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X