பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 20, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
சென்னை:பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுவதாகவும், இது வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மெட்ரோ ரயில் சேவையை , அதிக மக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொது மக்களிடம் பெறப்பட்ட
சென்னை மெட்ரோ, கட்ணடம், முதல்வர், பழனிசாமி, முதல்வர் பழனிசாமி,தமிழகஅரசு, chennai metro, metro


சென்னை:பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுவதாகவும், இது வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மெட்ரோ ரயில் சேவையை , அதிக மக்கள் பயன்படுத்தும் வண்ணம், அதன் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்று பொது மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுகிறது.

சென்னைவாசிகள் கோரிக்கை ஏற்பு மெட்ரோ டிக்கெட் அதிரடி குறைப்பு! முதல்வர் பழனிசாமி அறிவிப்பு


அதன் விபரம்



latest tamil news




* கியூ.ஆர். கோடு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நியமனத்தின் தொடுதல் இல்லா மதிப்பு கூட்டு பயண அட்டை மூலம் பயணிப்பவர்களுக்கு மேலும் கூடுதலாக அனைத்து பயணச்சீட்டுகளுக்கும் அடிப்படை கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்

* ஒரு நாள் வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம் தற்போதுள்ள கட்டம் 1 ன் 45 கி.மீ., வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் ரூ.100 ஆகும். தற்போது துவக்கப்பட்ட வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான 9 கி.மீ., நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ., வழித்தடத்திற்கும் அதே ரூ.100 ஆக இருக்கும்.

* ஒரு மாத வரையறுக்கப்படாத மெட்ரோ பயணம், தற்போதுள்ள கட்டம் 1 ன் 45 கி.மீ., வழித்தடப்பகுதிகளுக்கான கட்டணம் ரூ.2,500 ஆகும். தற்போது துவக்கப்பட்டுள்ள வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலா 9 கி.மீ., நீள கூடுதல் வழித்தடத்திற்கும் சேர்த்து மொத்தம் 54 கி.மீ., வழித்தடத்திற்கும் அதே ரூ.2,500 கட்டணம் தான்

* ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கட்டணத்தில் இருந்து 50 சதவீத தள்ளுபடி( வரையறுக்கப்படாத பயண அனுமதி சீட்டுகள் மற்றும் வரையறுக்கப்பட்ட நாட்களில் செல்லுபடியாகும் அனுமதி சீட்டுகள் நீங்கலாக)


latest tamil news




இந்த உத்தரவு வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
21-பிப்-202108:23:39 IST Report Abuse
karutthu பெரும் நஷ்டம் வந்து இதை இழுத்து மூடாமல் இருந்தால் சரி
Rate this:
Cancel
21-பிப்-202107:20:55 IST Report Abuse
முருகன் தமிழகத்தை கடனாளி மாநிலமாக மற்றும் அரசு.
Rate this:
Cancel
21-பிப்-202107:20:50 IST Report Abuse
முருகன் தமிழகத்தை கடனாளி மாநிலமாக மற்றும் அரசு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X