சோனியா, ராகுல் என்ன சொன்னார்கள் ? கார்கே பேட்டி

Added : பிப் 20, 2021 | கருத்துகள் (20)
Advertisement
திருவனந்தபுரம்: எதிர்க்கட்சிகள் என்பதால் மட்டும் அரசின் அனைத்து விஷயங்களையும் எதிர்க்கவில்லை. சாமான்ய மக்களை பாதிக்கும் அனைத்து கொள்கைகளையும் எதிர்க்கிறோம் என ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தெரிவித்துள்ளார்.ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த 15ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய எதிர்க்கட்சி தலைவராக,
மல்லிகார்ஜூனா கார்கே, காங்கிரஸ்,காங், அரசு, மத்திய அரசு, ராஜ்யசபா

திருவனந்தபுரம்: எதிர்க்கட்சிகள் என்பதால் மட்டும் அரசின் அனைத்து விஷயங்களையும் எதிர்க்கவில்லை. சாமான்ய மக்களை பாதிக்கும் அனைத்து கொள்கைகளையும் எதிர்க்கிறோம் என ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக இருந்த குலாம் நபி ஆசாத், கடந்த 15ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய எதிர்க்கட்சி தலைவராக, மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டார்.

திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாங்கள் எதிர்க்கட்சிகள் என்பதால் மட்டும் அரசின் அனைத்து விஷயங்களையும் எதிர்க்கவில்லை. சாமான்ய மக்களை பாதிக்கும் தவறான கொள்கைகளையும் நாங்கள் எதிர்க்கிறோம். இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள போவதில்லை. பார்லிமென்டில் பல்வேறு மக்கள் பிரச்னைகளை எழுப்புவது விளம்பரத்திற்காக அல்ல. அது சாமானிய மக்களை பாதிப்பதால், அந்த விவகாரங்களை எழுப்புகிறோம். சாமானிய மக்களின் பிரச்னைகள் மீது அதிக அக்கறை செலுத்துங்கள். அதைப்பற்றி பேசி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள் என, இந்த பதவியை கொடுக்கும் போது என்னிடம் சோனியாவும், ராகுலும் தெரிவித்தனர்.


latest tamil news




சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்று, அதை பார்லி., நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாய உற்பத்தி பொருளை விற்பனை செய்யும் மண்டிக்களை அழித்து விடும் என்பதால், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.
விவசாயிகளை திருப்தி படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. இதனால், அந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். ‛‛காலிஸ்தான்'' என முத்திரை குத்தி, போராட்டத்தில் உள்ள விவசாயிகளிடம் பிளவை ஏற்படுத்த அரசின் அனைத்து இயந்திரங்களும் முயற்சி செய்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hari - chennai,இந்தியா
21-பிப்-202112:25:44 IST Report Abuse
Hari இவர் ஒரு பரம ஏழை ,இவரால் பல ஏழைக்குடும்பங்கள் இன்று பணக்காரர்களாக ஆகி உள்ளனர் (பஞ்சமி நிலங்களை புடிங்கியவர்)
Rate this:
Cancel
nagendirank - Letlhakane,போஸ்ட்வானா
21-பிப்-202109:55:12 IST Report Abuse
nagendirank இன்னமும் நீங்கள் சொல்லிக்கொடுத்தாதான் செய்வீர்களா? உங்கள் அனுபவம் என்னாச்சி? நீங்கள் அனைவருமே பொம்மலாட்ட பொம்மைகள்தானே? எதிர் கட்சி என்றால் சபையில் விவாதிக்க வேண்டும் . வீண் கூச்சலுடன் , விதண்டாவாதத்துடன் வெளிநடப்பது அல்ல. திருக்குறள் -இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும்.. சொந்தமாக சிந்தித்து நாட்டுக்கு நல்லது செய்யவே நீங்கள் தேர்ந்து எடுக்க பட்டுள்ளீர்கள் . சோனியா ராகுல் பேச்சை கேட்கும் கிளிப்பிள்ளையாக அல்ல .
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
20-பிப்-202123:20:30 IST Report Abuse
s t rajan ம்ல்லிகார்ஜுன் கார்கே இல்லை, வீம்புக்கு மல்லு கட்டும் துர்யோதன் கார்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X