காற்று மாசு அளவை குறைக்க உதவிய இந்தியா; ஐநா

Added : பிப் 20, 2021 | கருத்துகள் (5) | |
Advertisement
உலக அளவில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து இதற்கு ஐநா தலைமையில் முக்கிய கூட்டம் நடைபெற்றது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்ததை அடுத்து உலக அளவில் புவி வெப்பமயமாதலைத் தடுக்க அனைத்து நாடுகளிலும் ஐநா விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்துள்ளது. இதனை அடுத்து 2050-ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பத்தையும் காற்றுமாசுவையும் குறைக்க ரஷ்யா,

உலக அளவில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து இதற்கு ஐநா தலைமையில் முக்கிய கூட்டம் நடைபெற்றது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்ததை அடுத்து உலக அளவில் புவி வெப்பமயமாதலைத் தடுக்க அனைத்து நாடுகளிலும் ஐநா விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்துள்ளது.



latest tamil news



இதனை அடுத்து 2050-ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பத்தையும் காற்றுமாசுவையும் குறைக்க ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அதிகம் கொண்ட நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பருவநிலை மாற்ற தடுப்பு சிறப்பு தலைவர் ஜான் கெர்ரி இந்த கூட்டத்தில் பேசி உள்ளார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாற்றம் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் அப்போது இந்திய அரசும் இணைந்தது. இதனையடுத்து கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியீட்டை ஒப்பந்தத்த வரம்புகளுக்கு உட்பட்டு இந்தியா 33-35% வரை வெகுவாகக் குறைத்தது. இதேபோல ரஷ்யா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தாங்கள் தொழிற்சாலைகள் மூலமாக வெளியிடும் மாசுவின் அளவை குறைத்தால் 2050-ஆம் ஆண்டுக்குள் ஐநா நிர்ணயம் செய்துள்ள இலக்கை எட்டி விடலாம் என்று அவர் கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளின் உதவி, காற்று மாசு குறைப்பதற்கு அத்தியாவசியமான ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் ஆட்சி காலத்தில் கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது.


latest tamil news



தற்போது இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளதால் தட்பவெப்பத்தை 1.5 செல்சியஸ் அளவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொள்ளவேண்டும். இதற்காக தங்கள் நாட்டு தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் தொகைகளை புகை அளவை குறைக்கவேண்டும் என்று ஜான் கூறியுள்ளார். மோடி அரசு பரிஸ் ஒப்பந்தத்தின்படி காற்று மாசு அளவை குறைக்க திட்டமிட்டது ஐநா கூட்டத்தில் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-பிப்-202107:17:49 IST Report Abuse
ஆப்பு சும்மாவா? 130 கோடி மக்களை முடக்கி, ரயில்களை நிறுத்தி, பெட்ரோல் விலை ஏத்தி, இப்போ சிறப்புரயில்னு அநியாயத்துக்கு கட்டணம் வசூலிச்சா எங்கே காற்று மாசுபடும்? இதனாலேதான் பூமி குளிர்ந்து வரலாறு காணாத மழை பெஞ்சிருக்கு.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
21-பிப்-202101:35:11 IST Report Abuse
மதுரை விருமாண்டி The worst offenders are ... drum roll..... அந்த தரவரிசை பட்டியலில் இந்தியா இருப்பதை நாசூக்காக சொல்கிறார்கள் .. வெள்ளைக்காரனுங்க இப்படித்தான் வாழைப்பழத்திலே ஊசி ஏத்துவாங்க.. You have great potential ன்னா, சொதப்பிட்ட்ட்ட்டே ன்னு அழுத்தமா சொல்றாங்கன்னு அர்த்தம்..
Rate this:
Cancel
காலணிகள் பழுது நீக்குவோர் சங்கம், குருமாவளவன் நகர், திம்மவாலனுபுரம் பெட்ரோலில் தற்போது 10 என்ற அளவில் டோப்பிங் செய்யப்படும் எத்தனாலின் அளவை 2023 ஆண்டு வாக்கில் 20 உயர்த்த முடியுமா என்று அனைத்து சாத்தியக்கூறுகளையும் நடுவண் அரசு பரிசீலித்து வருகிறது.இதன் மூலம் கரும்பு விவசாயிகளும் பயனடைவார்கள். CNG, HCNG, 2G மற்றும் 3G எத்தனால் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான வழிமுறைகளும் ஆராயப்படுகின்றன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X