அறிவியல் ஆயிரம்
அதிக தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி பல்வேறு நாடுகளிலும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் போன்ற பணக்கார நாடுகள் தங்களுக்கு தேவையான அளவை விட கூடுதலாக 100 கோடி 'டோஸ்' தடுப்பூசியை கொள்முதல் செய்து கையிருப்பு செய்துள்ளன. இதனால் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை முற்றிலும் ஒழிக்க அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி அவசியம் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம்
உலக தாய்மொழி தினம்
ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள இணைப்பு பாலமாக விளங்குவது மொழி. இது சமூக ஒருங்கிணைப்பு, கல்வி, வளர்ச்சிக்கு முக்கியமானதாக விளங்குகிறது. தாய்மொழியின் தனித்தன்மை, பண்பாட்டை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் பிப்.,21ல் உலக தாய்மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது. கிழக்கு பாகிஸ்தானில் (தற்போது வங்கதேசம்) 1952ல் உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என போராடியதால் உயிரிழந்த தாகா பல்கலை மாணவர்கள் நினைவாக 'யுனஸ்கோ' 1999ல் இத்தினத்தை உருவாக்கியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE