மே.வங்கம்: கட்சி மாறியவர்களுக்கு விஐபி பாதுகாப்பு

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
கோல்கட்டா: மே.வங்க மாநிலத்தில் கட்சி மாறிய எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியை மீண்டும் வர விடாமல் இருப்பதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளை பா.ஜ. கையாண்டு வருகிறது. விரைவில் தேர்தல் நடைபெற

கோல்கட்டா: மே.வங்க மாநிலத்தில் கட்சி மாறிய எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது



latest tamil news



மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியை மீண்டும் வர விடாமல் இருப்பதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளை பா.ஜ. கையாண்டு வருகிறது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,மற்றும் எம்.பி.,க்கள் மட்டுமல்லாது பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பா.ஜ.,வில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் மாநிலத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடைபெற்றது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் வரும் காலங்களில் மிகுந்த பரபரப்பு நிலவ வாய்ப்புள்ளது.. இதன் காரணமாக பா.ஜ.,வில் சேர்ந்துள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுக்கு அச்சுறுத்தல் உருவாக கூடிய வாய்ப்புகுறித்து பாதுகாப்பு துறையால் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய அரசு விஐபி பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி இவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை யினர் (சி.ஐஎஸ்.எப்) மூலம் விஐபிக்களுக்கு அளிக்கப்படும் குறைந்த பட்ச பாதுகாப்பு பிரிவான எக்ஸ் மற்றும் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.


latest tamil news



எக்ஸ் படை பிரிவில் இரண்டு ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் மற்றும் ஓய் படை பிரிவில் நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட கமாண்டோக்களும் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ppmkoilraj - erode.10,இந்தியா
21-பிப்-202119:05:01 IST Report Abuse
ppmkoilraj மனம் திருந்தி திரிணாமுல் காங்கிரஸில் மீண்டும் சேர்ந்திடும் வாங்க என்ற பயம் மேலும் இவர்களுக்கு வழங்கப்படும் சௌகரியங்களை கண்ட பாஜகவினர் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகிறது இதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
21-பிப்-202116:34:04 IST Report Abuse
mindum vasantham மேற்கு வங்கம் நாட்டில் எல்லை பகுதியில் உள்ளது மற்றும் பொறாமையில் தீவிரவாத தாக்குதல் நடத்த வாய்ப்பு உண்டு
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
21-பிப்-202101:27:40 IST Report Abuse
தல புராணம் பாதுகாப்பு செலவு அம்புட்டும் மக்கள் கொடுத்த டோல்கேட் வரி, பெட்ரோல் வரி, திருப்பி தராத ஜிஎஸ்டி அதிலிருந்த வந்த பணம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X