கோல்கட்டா: மே.வங்க மாநிலத்தில் கட்சி மாறிய எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
![]()
|
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் திரிணமுல் காங்கிரசை சேர்ந்த முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சியை மீண்டும் வர விடாமல் இருப்பதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளை பா.ஜ. கையாண்டு வருகிறது. விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மேற்கு வங்கத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,மற்றும் எம்.பி.,க்கள் மட்டுமல்லாது பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் பா.ஜ.,வில் தங்களை இணைத்து கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் மாநிலத்தில் பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.,நட்டா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர் மீது கொலை வெறி தாக்குதல் நடைபெற்றது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் விரைவில் தேர்தல் நடைபெற இருப்பதால் வரும் காலங்களில் மிகுந்த பரபரப்பு நிலவ வாய்ப்புள்ளது.. இதன் காரணமாக பா.ஜ.,வில் சேர்ந்துள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுக்கு அச்சுறுத்தல் உருவாக கூடிய வாய்ப்புகுறித்து பாதுகாப்பு துறையால் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய அரசு விஐபி பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்படி இவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை யினர் (சி.ஐஎஸ்.எப்) மூலம் விஐபிக்களுக்கு அளிக்கப்படும் குறைந்த பட்ச பாதுகாப்பு பிரிவான எக்ஸ் மற்றும் ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.
![]()
|
எக்ஸ் படை பிரிவில் இரண்டு ஆயுதம் ஏந்திய கமாண்டோக்கள் மற்றும் ஓய் படை பிரிவில் நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட கமாண்டோக்களும் இடம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement