காரில் போதைப் பொருள் வைத்திருந்த பா.ஜ., இளைஞர் அணி செயலர் கைது

Updated : பிப் 20, 2021 | Added : பிப் 20, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், காரில் போதைப் பொருள் வைத்திருந்த, பா.ஜ., இளைஞர் அணி பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமியை, போலீசார் கைது செய்துள்ளனர். இதில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் சதி செய்திருப்பதாக, பமீலா குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சோதனைமேற்கு வங்க மாநிலத்தில் தலைநகர் கோல்கட்டாவில், நேற்று மாலை, பா.ஜ., இளைஞர் அணியின் பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமி,
 Bengal BJP Leader Caught With Cocaine, Names Colleague Close To Kailash Vijayvargiya


கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், காரில் போதைப் பொருள் வைத்திருந்த, பா.ஜ., இளைஞர் அணி பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமியை, போலீசார் கைது செய்துள்ளனர். இதில், பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர் சதி செய்திருப்பதாக, பமீலா குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சோதனைமேற்கு வங்க மாநிலத்தில் தலைநகர் கோல்கட்டாவில், நேற்று மாலை, பா.ஜ., இளைஞர் அணியின் பொதுச் செயலர் பமீலா கோஸ்வாமி, காரில் சென்றார். அவருடன், இளைஞர் அணி உறுப்பினர் பிரபிர் குமார் தே என்பவரும் இருந்தார்.அப்போது, அவரின் காரை மறித்து, போலீசார் சோதனை செய்தனர்.


latest tamil news



சோதனையில், காரின் இருக்கைக்கு அடியில் இருந்தும், பமீலாவின் பணப் பையில் இருந்தும், 'கோகெய்ன்' என்ற போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டது. 100 கிராம் அளவுக்கு இருந்த, அந்த போதைப் பொருளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.இதையடுத்து, காரில் இருந்த, பமீலா, பிரமிர் குமார் மற்றும் பமீலாவின் பாதுகாவலரை போலீசார் கைது செய்தனர். கைதான பமீலா செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த விவகாரத்தில், சி.ஐ.டி., விசாரணை வேண்டும்.என்றார்.
கைது செய்யப்பட்ட பமீலா கோஸ்வாமியை உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 25ம் தேதி வரை கோர்ட் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-பிப்-202117:30:17 IST Report Abuse
முக்கண் மைந்தன் இப்டில்லாம் செய்றது வாடிக்கெதானெ
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
21-பிப்-202117:01:18 IST Report Abuse
Rajas எதற்கெடுத்தாலும் டாஸ்மாக் என்று கூப்பாடு போடும் கும்பல் இதற்க்கு என்ன சொல்ல போகிறது. ஒரு மேல் மட்ட பிஜேபி தலைவரின் சதி என்று அந்த பெண்ணே சொல்கிறார்.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
21-பிப்-202117:16:41 IST Report Abuse
Ellammanகிலோ என்ன விலை என்று கேட்பார்கள் .......
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
21-பிப்-202114:23:47 IST Report Abuse
Amirthalingam Shanmugam ஒன்னும் சரியில்லையே. பேதைக்கு எதற்கு போதை?.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
21-பிப்-202115:34:48 IST Report Abuse
Ellammanஅது பீ ஜெ பீ யின் செய்வினை பீ ஜெ பீ என்றால்... ஒரே அக்கப்போர் தான்...அவரே அவருடைய தலைவரை கைகாட்டியது தான எனக்கு பிடித்த ஒரு விஷயம்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X