சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் தள்ளுபடி முறைகேடு விவசாயிகள் சாலை மறியல்

Added : பிப் 20, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:கூட்டுறவு சங்கத்தில், விவசாய கடன் தள்ளுபடி செய்வதில் முறைகேடு நடந்துள்ளதை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, கொல்லைக்காடு கிராமத்தில், பூவாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர்.கூட்டுறவு சங்கத்தில்,

தஞ்சாவூர்:கூட்டுறவு சங்கத்தில், விவசாய கடன் தள்ளுபடி செய்வதில் முறைகேடு நடந்துள்ளதை கண்டித்து, விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, கொல்லைக்காடு கிராமத்தில், பூவாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில், 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடன் பெற்றுள்ளனர்.

கூட்டுறவு சங்கத்தில், விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்து, சமீபத்தில் முதல்வர் அறிவித்தார்.'பூவாளூர் கடன் சங்க செயலர், தலைவர் உள்ளிட்டோர், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களிலும், நிலம் இல்லாத நபர்களின் பெயர்களிலும் கடன் பெற்றிருந்தனர்.'தற்போது, லட்சக்கணக்கான ரூபாய் தள்ளுபடி பெற்றுள்ளனர்.

இதை அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 'கடன் தள்ளுபடி பெற்றவர்களின் முழு விபரத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என வலியுறுத்தி, பட்டுக்கோட்டை - கறம்பகுடி சாலையில், கூட்டுறவு கடன் சங்கம் முன், விவசாயிகள் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.பட்டுக்கோட்டை தாசில்தார் தரணிகா உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பின், விவசாயிகள் மறியலை கைவிட்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X