பொது செய்தி

தமிழ்நாடு

தேவையற்ற குழப்பமும், தெளிவான தீர்ப்பும்!

Added : பிப் 20, 2021
Share
Advertisement
அண்ணா பல்கலையில் நடத்தப்படும், எம்.டெக்., 'பயோ டெக்னாலஜி' மற்றும் 'கம்ப்யூடேஷனல் பயாலஜி' படிப்புகளில், தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பெரும் ஆபத்து வந்து விட்டதாக, பலரும் குரல் எழுப்புகின்றனர். இப்பிரச்னையின் அடிப்படையை புரிந்தால், எந்த ஆபத்தும் இல்லை என்பது விளங்கும்.அரசின் நிதிமத்திய அரசின், அறிவியல்

அண்ணா பல்கலையில் நடத்தப்படும், எம்.டெக்., 'பயோ டெக்னாலஜி' மற்றும் 'கம்ப்யூடேஷனல் பயாலஜி' படிப்புகளில், தேவையற்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு பெரும் ஆபத்து வந்து விட்டதாக, பலரும் குரல் எழுப்புகின்றனர். இப்பிரச்னையின் அடிப்படையை புரிந்தால், எந்த ஆபத்தும் இல்லை என்பது விளங்கும்.


அரசின் நிதி

மத்திய அரசின், அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இருப்பது, பயோ டெக்னாலஜி துறை. அண்ணா பல்கலை உட்பட, 34 கல்வி நிறுவனங்கள், அந்த துறையுடன் ஒப்பந்தம் செய்து, இரண்டு எம்.டெக்., படிப்புகளை வழங்குகின்றன.கடந்த, 1980 முதல், இரு படிப்புகளும் உள்ளன. அதாவது, மத்திய அரசின் நிதி உதவியோடு நடத்தப்படும் படிப்புகள் என, அதற்குப் பெயர். அந்த படிப்பு படிக்க வருவோருக்கு, மாதம், 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உண்டு.

அண்ணா பல்கலையில் உள்ள, இரு படிப்புகளுக்கும் மொத்தம், 45 மாணவர்கள் தேர்வு செய்யப் படுவர். கடந்த ஆண்டு வரை, மாணவர்கள் தேர்வை, மத்திய அரசே செய்தது. அண்ணா பல்கலை, அப்படிப்புகளுக்கான உள்கட்டமைப்பையும், வசதிகளையும் செய்து தரும்.

கொரோனா தொற்று பரவலால், 2020ல், பயோ டெக்னாலஜி துறையில், அண்ணா பல்கலையையே மாணவர் சேர்க்கையை நடத்தும்படி தெரிவித்தது. 'காட் பி' என்ற, தகுதி தேர்வை நடத்தி, தேர்வு பெற்ற மாணவர்களின் பட்டியலை, அண்ணா பல்கலைக்கு அனுப்பி வைத்தது.


கோரிக்கை

அங்கே தான் பிரச்னை ஆரம்பித்தது. இது, மத்திய அரசின் நிதி உதவியுடன் நடக்கும் பாடத் திட்டங்கள். அதில், மத்திய அரசு வழங்கும், 49.5 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதா அல்லது தமிழகத்தில் உள்ள, 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதா என்ற, கேள்வி எழுந்தது.அண்ணா பல்கலை என்பது, மாநில அரசு உருவாக்கிய பல்கலை. அதனால், இங்கு, 69 சதவீத இடஒதுக்கீட்டை தான் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கை, மாநில அரசு தரப்பில் இருந்து வலியுறுத்தப்பட்டது.

இந்த குழப்பம் காரணமாக, இந்த ஆண்டு, இரு படிப்புகளையும் கைவிடுவதாக, அண்ணா பல்கலை தெரிவித்து விட்டது.'காட் பி' தேர்வு எழுதி, படிப்பில் சேர காத்திருந்த இரு பெண்கள், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடி, தங்களுக்கு நிவாரணம் கோரினர். வழக்கு விசாரிக்கப்பட்ட போது தான், மேலே குறிப்பிட்ட விபரங்கள் வெளிவந்தன.


ஒப்பந்தம்

அதற்குள், சமூக வலைதளங்களிலும், இதர இடங்களிலும், 'இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து' என்ற புரிதல் இல்லாத விமர்சனங்கள் எழுந்தன.இந்த பிரச்னையில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி புகழேந்தி அமர்வு, ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி விட்டது.'குறிப்பிட்ட படிப்புகளை நடத்துவதற்கு, மத்திய அரசின் நிதி உதவியை பெறுவதற்கு ஒப்பந்தம் போடும் போதே, மத்திய இட ஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றுவதாக ஏற்று, கையெழுத்திடப்பட்டு உள்ளது.


இட ஒதுக்கீடு

'அதனால், அதன்படியேதற்போது, 49.5 சதவீத இட ஒதுக்கீடு முறையே பின்பற்றப்பட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.'அதை செய்ய முடியாது' என, மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், மத்திய அரசே மாணவர்கள் தேர்வை நடத்தி, விபரங்களை அனுப்பி வைக்கும்படி, நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிதி உதவியை பெறும் போதே, என்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற தெளிவு, ஒப்பந்தத்தில் இருக்கும் போது, எதற்கு இத்தனை குழப்பங்கள் என்பது தெரியவில்லை.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X