கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு ஒப்புகை சீட்டு ஐகோர்ட்டில் மனு நிராகரிப்பு

Added : பிப் 20, 2021
Share
Advertisement
சென்னை:மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்படும், சரிபார்ப்பு ஒப்புகை சீட்டுகளையும் எண்ணக் கோரியதை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.தேர்தலின் போது, யாருக்கு, எந்த சின்னத்துக்கு ஓட்டு அளிக்கப்பட்டது என்பதை, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும், இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டில், வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். லோக்சபா

சென்னை:மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்படும், சரிபார்ப்பு ஒப்புகை சீட்டுகளையும் எண்ணக் கோரியதை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

தேர்தலின் போது, யாருக்கு, எந்த சின்னத்துக்கு ஓட்டு அளிக்கப்பட்டது என்பதை, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்படும், இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டில், வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். லோக்சபா தேர்தலின் போது, ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் இணைக்கப்பட்டன.தற்போது, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் நிலையில், ஓட்டு எண்ணிக்கையின் போது, ஒப்புகை சீட்டுகளையும் எண்ணும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, பாக்கியராஜ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையம்சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இதுபோன்ற வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதாக தெரிவித்தார்.இதையடுத்து, தற்போதைய நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக, எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, வழக்கு விசாரணையை முடித்து வைத்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X