கம்ப்யூட்டர் பாடத்திற்கு ரூ.200 வசூல் ஏன்? கல்வித்துறையில் விசித்திரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கம்ப்யூட்டர் பாடத்திற்கு ரூ.200 வசூல் ஏன்? கல்வித்துறையில் விசித்திரம்

Added : பிப் 20, 2021
Share
மதுரை: அரசு மேல்நிலை பள்ளிகளில் ஹைடெக் லேப், கம்ப்யூட்டர்கள் வசதி இருந்தும் மாணவர்களிடம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களுக்காக சிறப்பு கட்டணம் ரூ.200 வசூலிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் 1999 முதல் கணினி அறிவியல் பாடத்திட்டங்கள் மேல்நிலை பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டன. போதிய தொழில்நுட்ப வசதி இல்லாததால் அப்போதைய கம்ப்யூட்டர் நிறுவனங்கள் உதவியுடன்

மதுரை: அரசு மேல்நிலை பள்ளிகளில் ஹைடெக் லேப், கம்ப்யூட்டர்கள் வசதி இருந்தும் மாணவர்களிடம் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களுக்காக சிறப்பு கட்டணம் ரூ.200 வசூலிப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 1999 முதல் கணினி அறிவியல் பாடத்திட்டங்கள் மேல்நிலை பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டன. போதிய தொழில்நுட்ப வசதி இல்லாததால் அப்போதைய கம்ப்யூட்டர் நிறுவனங்கள் உதவியுடன் பள்ளிகளில் கட்டமைப்பு மற்றும் பயிற்றுனர்கள் வசதி ஏற்படுத்தப்பட்டது. பயிற்றுனர் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்காக கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்களிடம் மட்டும் ரூ.200 சிறப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இப்பாடப் பிரிவுகளை 2006 முதல் அரசே ஏற்று நடத்துகிறது. அதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளது.

தகுதியுள்ள கம்ப்யூட்டர் பயிற்றுனர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி 2008-ல் அவர்களை கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்களாக பணி வரன்முறை செய்தது. அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் ஹைடெக் லேப், ஸ்மார்ட் கிளாஸ் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி 20க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் 1999 முதல் அமலில் உள்ள ரூ.200 சிறப்பு கட்டணம் இன்னும் மாணவர்களிடம் வசூலிக்கப்படுவது விசித்திரமாக உள்ளது.

ஆசிரியர்கள் கூறியதாவது: ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் மட்டுமே இருந்தது. புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்ப்யூட்டர் டெக்., பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பின் வணிகவியல் உள்ளிட்ட பெரும்பாலான கலைப் பிரிவுகளுக்கும் கம்ப்யூட்டர் தொடர்பான பாடப் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அப்பாடப் பிரிவுக்கும் மாணவருக்கு தலா ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தை உடனடியாக ரத்து செய்து மாணவர்களின் நலன் காக்கவேண்டும் என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X