பேச்சு, பேட்டி, அறிக்கை| Dinamalar

சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : பிப் 20, 2021
Share
'சாலையில், 300 கார்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தால், ஆங்காங்கே கரகம், மேள தாளங்கள் இருந்தால், அதை பார்க்க கூட்டம் சேரத் தானே செய்யும்...' என, பதிலளிக்கத்தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேச்சு: டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மட்டுமே, அ.ம.மு.க.,வினர் உள்ளதாக, தமிழக அமைச்சர்கள் கூறி வந்தனர். சிறையிலிருந்து சசிகலா வந்த போது, தமிழகத்தின் அனைத்து

பேச்சு, பேட்டி, அறிக்கை


'சாலையில், 300 கார்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தால், ஆங்காங்கே கரகம், மேள தாளங்கள் இருந்தால், அதை பார்க்க கூட்டம் சேரத் தானே செய்யும்...' என, பதிலளிக்கத்தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேச்சு:
டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மட்டுமே, அ.ம.மு.க.,வினர் உள்ளதாக, தமிழக அமைச்சர்கள் கூறி வந்தனர். சிறையிலிருந்து சசிகலா வந்த போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் சாரை சாரையாக கட்சியினர் வந்து குவிந்தனர்.


'ஓட்டு கேட்காமல், சண்டை போட கட்சியினரை தயார்படுத்தும் ஒரே கட்சி, நம்ம கட்சி தானே...' என, சொல்லத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு
: நான் ஓட்டு கேட்டு வரவில்லை. ஓட்டை விட, நாட்டை காப்பதே முக்கியம். இளைஞர்களே, நமக்கு ஓட்டு முக்கியமல்ல; சண்டை போட தயாராக இருக்க வேண்டும். தற்போது பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்; தேர்தல் வரட்டும், எங்கள் பலத்தை நிரூபிக்கிறோம்.


'அந்த பட்டியலை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்; உங்கள் கட்சி சார்பில், எத்தனை இளைஞர்களுக்கு வேலைக்கான பயிற்சி அல்லது வகுப்புகள் அளித்துள்ளீர்கள்...' என, மடக்கத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை:
ஆண்டுக்கு, இரண்டு லட்சம் பேருக்கு வேலை வழங்குவோம் என கூறி, ஆட்சிக்கு வந்த, அ.தி.மு.க., இந்த ௧௦ ஆண்டுகளில் எத்தனை லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளது என்பதை பட்டியலாக வெளியிடத் தயாரா?


'உங்களின் ஓட்டு வங்கியை, பிற கட்சிகளுக்கு உணர்த்த, ஒரு முறையாவது, 234 தொகுதிகளிலும் போட்டியிடுங்கள்...' என, யோசனை கூறத் துாண்டும் வகையில், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேட்டி:
குறைவான தொகுதிகளில் போட்டியிட வைத்து, எங்களின் ஓட்டு வங்கி சதவீதம் குறைவாக இருக்கிறது என கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் சரிசமமாக மல்லுக்கட்டிய கட்சி, எங்களின், தே.மு.தி.க., தான்.


'அண்ணனுக்கு பயந்து, மதுரை வராமல் இருந்தவர், இப்போது என்ன தைரியத்தில் வந்தார் என்ற கேள்வி எழுகிறதே...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ராஜு பேட்டி:
மதுரையில் இருக்கும், அண்ணன் அழகிரிக்கு பயந்து, துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், மதுரை பக்கமே வரவில்லை. ஆனால், இப்போது மதுரை வந்து, அங்கே ஊழல், இங்கே ஊழல் எனகூறியுள்ளார்.


'தி.மு.க.,வில் நிறைய பணம் இருக்கிறது தானே; கஷ்டப்படும் விவசாயிகளுக்கு நிதியுதவி அளித்து, கைதுாக்கி விடலாமே...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை:
கொரோனாவால் விவசாயிகள் பலர், வங்கிக்கடனை செலுத்த முடியாத நிலையில், வங்கிகள் கடுமை காட்டுவதை தடுக்க, இ.பி.எஸ்., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாயிகளை வீட்டை விட்டு துரத்துவது தான், பச்சைத்துண்டு பழனிச்சாமி சொல்லும் வெற்றி நடை போடும் தமிழகமா?


'மீனவர்களுக்கு ஏதாவது அந்த அமைச்சகம் செய்திருந்தால், ராகுலுக்கு மறந்திருக்காது; ஒன்றும் செய்யாமல் இருந்ததால், மறந்து தானே போயிருக்கும்...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
மத்தியில் மீன் வளத் துறைக்கு என அமைச்சகம் இருப்பது கூட தெரியாமல் இருக்கிறார், காங்., முன்னாள் தலைவர் ராகுல். இதுவே, பா.ஜ., தலைவர் சொல்லியிருந்தாலோ இல்லை, புதுவை முதல்வர் நாராயணசாமி போல தெரிந்தே தவறாக மொழிபெயர்த்திருந்தாலோ, ஊடகங்கள் அமைதியாக இருந்திருக்குமா என்பது கேள்வி தான்.


'தமிழருக்கு என இருந்த பண்பாடு, கலாசாரத்தை தான், உங்களைப் போன்றவர்கள் கெடுத்து குட்டிச்சுவராக்கி வருகின்றனரே என்கின்றனர், அ.தி.மு.க.,வினர் மற்றும் எதிர்க்கட்சியினர்...' என, போட்டுக் கொடுக்கத் தோன்றும் வகையில், தி.மு.க., துணை பொதுச் செயலர் ராஜா பேட்டி:
எங்களின் தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் வகையில், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கலாசாரம் என்று சொல்லாதீர்கள். எங்களுக்கு என்று தனி பண்பாடு இருக்கிறது. அந்த அடையாளத்தை காப்பாற்றுங்கள் என்று சொல்கிறோம்.


'ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது...' என, சொல்லத் துாண்டும் வகையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி:
டில்லி சென்று, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, அமித்ஷாவை சந்தித்து, தமிழக வர்த்தகர்களின் கோரிக்கைகள், தேவைகள் குறித்து விரைவில் பேச உள்ளோம்.


'இந்த உண்மையை கண்டுபிடிக்க, அவர்களுக்கு இத்தனை காலமானதா; தேர்தல் நேரத்தில் தான், கட்சி மாற நேரம் கிடைத்ததா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு:
காங்கிரஸ் கட்சி தலைவரின் போக்கு பிடிக்காமல், விருதுநகர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர், அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளனர். அந்த கட்சியில், உழைப்புக்கு அங்கீகாரம் கிடையாது; அவர்களுக்கு உழைப்பது வீண்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X